என் நினைவு இடுக்கில் ஒரு கரப்பான் பூச்சியைப்போல உள் நுழைந்துகொண்டாய் முன் அறிவிப்பு ஏதுமின்றி ஒரு ஆதர்ஸ விருந்தாளியாய் உன்னை மறக்க நினைத்து மறக்காமல் இருக்கிறேன் உன்னைத் துறக்க நினைத்து பின்தொடர்கிறேன் உன்னை மறுதலிக்க மறுதலிக்க குருத்தாய் மறுபடி மறுபடி பிரசன்னமாகிறாய் உன்னைத் திரும்பிப்பார்க்கவே திரும்பிப் பார்க்காமல் கடக்கிறேன் உன்னிடம் பேசவே மௌனமாகிறேன் உன்னை நெருங்கி வந்தே தூரமாகிறேன் துயிலின் விளிம்பில் இமையைத் துளையிடுகிறாய் கனவின் கதவுகளைத் கறாரய்த் தள்ளித்திறக்கிறாய் நரம்புகளில் நிரம்பி வழிகிறாய் உன் அழைப்பு அதுவென புன்னகையில் சிலிர்க்கிறேன் நரம்புகளில் சந்தேகக் குருதி இரு அணுக்களையும் புறமுதுகிடச் செய்கிறது இச்சை இறுமாப்பு கொண்டு அடங்க மறுக்கும் அலெக்சாந்தர் குதிரையாகிறது நான் உன்னோடு எனக்குள் பேசிக்கொள்கிறேன் பேசிப் பேசிப் என் பொழுது கணப்பொழுதும் சாய்ந்ததேயில்லை மையிருட்டில் தரிசிக்கும் தருணம் அலாதியானது அப்போது எனக்காகத் ஒரு காட்டு மலரைப்போல் காத்திருக்கிறாய் உன் வசீகர பிம்பம் மனதுக்குள் அடங்காது எரிகிறது ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)