மாடுகள் மலைகள் ஏரிகள்~ 5 துராங்கியின் அருகே உள்ள தௌப்பௌ அருகே உள்ள ஹுக்கா falls பார்த்துவிட்டு தொக்கானு விடுதிக்குப் புறப்பட்டோம். ஊர் இடப் பெயெர்களெல்லாம் மௌரிய மொழிகளிலேயே பெரும்பாலும் உள்ளன.அதற்குக் காரணம் உண்டு. நியூசிலாந்தில் மௌரிகள் என்ற பழங்குடி மக்கள் இன்றைய கணக்குப் படி 7 லட்சம் பேர் இருக்கிறார்கள். நியூலாந்துக்கு நிலம் தேடி வாழ வந்த முதல் இனம் இவர்கள்தான். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஹவாயி தீவுகளிலிருந்து கடல் மார்க்கமாக வந்து ஏரிக்கரைகளில் குடியேறியவர்கள் மௌரிகள். அவர்களின் தொடக்க கால பண்பாடுகளில் ஒன்றான கூட்டு நடனத்தை இன்னமும் பாதுகாத்து வருகிறது நியூசிலாந்து.இந்த நடனம் நியூசிலாந்து அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தாகப் படைக் கிறார்கள். பெரிய உருவ அமைப்பு கொண்டவர்கள் மௌரிகள். ஆறடிக்கு மேலாக் உயர்ந்து பீமன் கணக்காய் நிற்கிறார்கள். ஆனால் நியூசிலாந்து வெள்ளையர்கள் ஐந்தே முக்கால் அடி உயரத்துக்கு குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள் . பழங்குடிகளின் பண்பாட்டு விழு...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)