17.9.2017 வல்லினம் நிகழ்ச்சி முடிந்த மறுநாள் பாண்டியன் கோணங்கியை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். பாண்டியன் காரிலிருந்து இறங்குவதற்கு முன்னர் கோணங்கி நட்பு மிகுந்த புன்னகையோடு என்னைப் பார்த்தார். நான் இரு கைகளைக் கூப்பி வணங்கினேன் . அவரும் கைகளைக் கூப்பினார். அதிலிருந்தே மனிதர்களை முதல் பார்வையில் நேசிக்கும் அப்பழுக்கற்ற தகவல் அனுப்பப் பட்டிருந்தது எனக்கு. காரில் இருந்து இறங்கியதும் கட்டிப் பிடித்துக் கொண்டார். அவருக்காக நான் தயார் செய்த தேநீரை கொண்டு வந்து மேசையில் வைத்தேன். கொஞ்சம் கூட சுணங்காமல் ‘தேநீரா?’ என்று மகிழ்ச்சி நிறைந்த மொழியோடு, அருந்த ஆரம்பித்தார். நான் தமிழகத்தில் தயார் செய்யும் தேநீரின் சுவை குன்றாமல் செய்யப் பழகியவன். எனவே தேநீரே என் வரவேற்பு பானம். என் வீட்டின் முன்புறத்தில் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலி சிறிய வட்ட மேசையைப் பார்த்து ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)