கோ.புண்ணியவான். நான் சினிமாப் படம் பார்ப்பது மிகக்குறைவு. சினிமா விமர்சனங்களைப் படித்தும் , பார்த்தவர்கள் கருத்து சொல்லும்போது கேட்டும் படங்களைத் தேர்ந்தெடுப்பேன். அப்படிக் கவனமாகத் தேர்வு செய்தும் , தியேட்டரில் அமர்ந்து பொறுமிக்கொண்டு பொழுதைக் கொன்ற தருணங்கள் இம்சையானவை (குடும்பத்தோடு போனதால் வெளியே தப்பித்து ஓட முடியவில்லை). தமிழ் சினிமாவை நான் வெறுக்க ஆரம்பித்தது எம் ஜி ஆரின் மிகை ஒப்பனையைப் பார்த்த பிறகு. தன் போலி பிம்பத்தை முன் வைத்து அரசியல் லாபத்துக்கு அவர் தன்னை முன்னெடுத்த போது என் எதிர்ப்புணர்வு துவங்கியது. அவர் ஒப்பனை முகத்தைச் சுரண்டிப் பார்த்தால் கால் அங்குல ஆழத்துக்காவது முகப்பூச்சை சுரண்டி எடுக்கலாம். அதிலும் தன்னுடைய தள்ளாத வயதில் பதின்ம வயது நடிகைகளுடன் ஜோடி போட்டது என்னைபோன்ற ரசிகர்கள் செய்த பெரும்பாவம். இன்றைக்கு மலேசியாவில் ஆளும் கட்சிக்கு ஆதரவாய்ச் செயல்பட்டு ‘சத்து மலேசிய’ சுலோகத்தைத் ‘தூக்கிப் பிடித்து’ நம் மக்களை ஏமாற்றும் அரசு சார்ந்த ஊடகத்தைப் போலவே தமிழ் நாட்டிலும் , நடிகர்களை வளர்த்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அதன் கோள...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)