Skip to main content

Posts

Showing posts from November 13, 2016

ரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்- அஞ்சலி

                                                            1980  களின் இறுதியில் என்று நினைக்கிறேன். பினாங்கு அறிவியல்  பல்கலைக் கழகத்தின் ஏதோ ஒரு விழாவுக்குக் சென்றிருந்தேன். அங்கே சில நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் ‘வானத்து வேலிகள்’ நாவலும் இருந்தது. ரெ. கா பெயரைப் பார்த்தவுடன் அந்நாவலை வாங்கிக்கொண்டேன். விலை மூன்று ரிங்கிட். அதனை இரண்டு நாளில் படித்து முடித்துவிட்டு அவருக்கு ஒரு கடிதம் போட்டேன். முகவரி நூலில் இருந்தது. ஒரு புல்ஸ்கேப் தாளில் எழுதப்பட்ட என் பார்வையின் பதிவு அது. அதற்கு முன்னும் அதற்குச் சில ஆண்டுகள் கழித்தும் அவரைச் சந்த்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘வானத்து வேலிகள்’  நாவல் என்னை அக எழுச்சி பெறச்செய்த நூல். பிற நாவல்கள் வாசிப்புக்கான  நுழைவாயிலைத் திறந்து வைத்திருந்தது . என் முதிராப் பருவத்தில் என்னை வாசிப்பு இன்பத்தில் ஆழ்த்தி...