Skip to main content

Posts

Showing posts from May 9, 2010

மாலதி தர்மலிங்கம் said

மாலதி தர்மலிங்கம் said பேரங்காடிகள் களவாடிவிட்ட நோட்டுக்களைப்போல..... இந்த வரிகளுக்கு விளக்கம் தந்தால் சிறப்பாக இருக்கும். நன்றி.
என் வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி, கவிதையைப் புரிந்துகொள்ள்ளும் சிரமத்தால் பெரும்பாலான வாசகர்கள் கவிதைப்பக்கத்தைக் கடந்துவிடுகின்றனர். நீங்கள் ஆர்வம் காட்டியமை ஆறுதல் அளிக்கிறது. கவிதைக்கு வருவோம். பேரங்காடிகளில் நமக்குத்தேவையான பொருட்களை விற்பதோடு நில்லாமல் நமக்குத்தேவையற்ற பொருட்களையும் கவர்ச்சியாக காட்சிப்படுத்துகின்றன. அந்த கவர்ச்சியில் ஈர்க்கப்பட்ட நாம் நமக்குத் தேவையற்றது என்பதை கவனத்தில் கொள்ளாமல். புறக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு பணம் செலவு செய்து அவற்றை வாங்கிவிடுகிறோம். நம்மை வாங்கவைக்கவே அவை கவர்ச்சியாக காட்சிப்படுத்தப்படுகின்றன. இது ஒரு வகையில் பகற்கொள்ளைதான். கவிஞன் அன்றைய அனுபவ நீட்சியைக் கவிதையாக எழுதவேண்டுமென்று நினைக்கிறான். ஆனால் வீட்டில் தன் குழந்தைகள் அவனை ஆர்வத்தோடு வரவேற்கும்போது அவன் எழுத நினைத்த கவிதை வரிகள் குழந்தைகளின் வரவேற்பால் மறந்தே போகிறான். பேரங்காடிப்பொருட்கள் அவன் பணத்தைக் களவாடிவிட்டதுபோல குழந்தைகளின் ஆர்வ நிலை அவன் கவிதையைக் ‘களவாடிவிடுகிறது’ என் வலைப்பூவை உங்கள் ஆசிரியர்களிடம் அறிமுகம் செய்யுங்கள். எழுத்தாளர் ஒருவர் ஒரு ஏழை புத்தக வியா...

களவாடப்பட்டுவிட்டன கவிதைகளும்

இலக்கை நோக்கிய நெடுஞ்சாலை பயணத்தில் கைக்குழந்தையுடன் காத்திருந்து பின்னுக்கு ஓடி மறைந்தும் கவிதையாய் மீள்பிரசன்னமாகிறாள் பேருந்துக்காக காத்திருக்கும் தருணத்திலும் இரு கால்களையும் விபத்தாலோ வியாதியாலோ இழந்த முகத்தோடு அன்னாந்து கையேந்தும் அவன் இடுப்புக்குக்கீழ் கால்களாய் கவிதைகள் முளைத்தன வியிற்றை நிரப்பிக்கொண்ட புத்தி சுவாதீனமற்ற இளம் தாயொருத்தி சிக்குப்பிடித்த தலையோடும் புராதன உடையோடும் தன்னிலை மறந்து திரிகிறாள் வாகனங்கள் சரசரக்கும் மேய்ன் சாலையில் அப்போதும் ஒர் கவிதை குழந்தையை மையமிட்டிருந்தது பள்ளிச்சீருடையோடு பையன் ஒருவன் தள்ளிக்கொண்டுவந்த மாணவி ஒலித்து வைத்திருந்த புத்தகப்பையைத்தேடி அலைந்தது இன்னுமொரு கவிதை பேரங்காடிப்பையோடு வாசலைதொட்ட வேளையில் ஓடிவந்த குழந்தை முகம்பார்த்ததும் மையமிட்டிருந்த கவிதைகள் சப்தமின்றி கசிந்து போய்விட்டன பேரங்காடிகள் களவாடிவிட்ட நோட்டுக்களைப்போல. கோ.புண்ணியவான். Ko.punniavan@gmail.com