அன்று இரவு நிறைவான தூக்கம் கிடைத்தது. அதிகக் களைப்புதான் காரணம். தூக்கம் வராதவர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகள் சொல்லப்படுகின்றன. என் பங்குக்கு நானும் சொல்லிவைக்கிறேன். சாயங்கால நேரத்தில் உடல் களைக்க பயிற்சிகள் மேற்கொள்ளுங்கள். உடல் வலிக்க வலிக்க. அல்லது குனிந்து நிமிர்ந்து தோட்ட வேலை செய்யுங்கள். நன்றாகச் சாப்பிடுங்கள் பயிற்சி முடிந்து. இனிப்பு நீர் உள்ளவரகள் குறைந்த கேலரி உணவை அதிகம் சாப்பிடலாம். தினமும் சரியான நேரத்தில்உறங்கப் போவது மிக முக்கியம். உறங்கப்போகும் கால வரையறையைச் தள்ளிப்போடாதீர்கள். நாளாக நாளாக 11 மணி என்பது பின்னரவு இரண்டு மூன்றுக்குத்தான் தூக்கம் வரும். உலகமே தூங்கிவிடும் நாம் மட்டுமே படுக்கையில் புரண்டுகொண்டிருப்போம். அதற்காக தூங்கும் உலகத்தைப் பார்த்து பொறாமை படாதீர்கள். தூக்கம் துக்கமாகிவிடும். நம்முடைய தூக்கம் கெடுவது கால அட்டவணையைக் கறாராகப் பின்பற்றாததுதான் காரணம். இரண்டாவது, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். கண்கள் தூக்கத்தை வேண்டி மல்லுக்கு நிற்கும் வரை நீயா நானா என்று சவாலுக்கு நில்லுங்கள். படுக்கை விளக்கு கைக்கெட்டிய தூரத்தில...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)