அந்த வெட்ட வெளிக்கடையில் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சின் திசை எங்கெங்கோ போனாலும் திரும்ப இலக்கியத்தின் மீதுதான் மையமிட்டிருந்தது. கடையிலிருந்து வெளியாகும் போது மணி ஒன்றைத் தாண்டியிருக்கும்.மீண்டும் நடந்தே அறைக்குச் சென்றோம். எங்கள் பேச்சு மீண்டும் தொடர்ந்தது. "நீங்கள் எழுதிய புத்தகம் கொண்டு வந்தீர்களா" என்று வினவினேன். " ஒரு ஏழெட்டு வகையில் மூன்று நான்கு காப்பிகள் கொண்டு வந்தேன்" என்றார். அவற்றுள் பாதிக்குமேல் நான் படித்துவிட்டவை. அவர் வைத்திருந்ததில் 'மௌனியின் படைப்புகளும் அடங்கும். "மௌனியின் கதைகள் புரிந்து கொள்ள சிரமமாயிற்றே' என்றேன். "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நம்முடைய மன எப்பம்டி ஒரே சமயத்தில் பல இழைகளாக சிந்திக்கிறதோ, அதேபோலத்தான் அவர்கதைகளும் இயங்கும்" என்றார்."இப்போ நாம் பேசிக்கொண்டிருக்கும்போது எப்படி இன்னொரு இழைச் சிந்தனை வேறு ஒன்றுக்குத் தாவுகிறதோ,அது போலவே அவர் கதையும் தாவும். புரிந்துகொள்வது சிரமமில்லை" என்றார். மௌனியைப் பற்றி நான் வரைந்துவைத்த சித்திரம் இப்போது தெளிவாகத் தெரிந்தது. இதற்க...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)