13. நிழலாய்ப் பின்தொடரும் சாதிமை என்ற பேய் மூன்றாண்டுகளுக்கு முன்னர் என் நண்பனின் மகனுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. காதல் திருமணம். எல்லாருக்கும் அழைப்பிதழ் கொடுத்து முடித்திருந்தான். அப்போது அவன் முகம் அன்றலர்ந்த தாமரையாய் பூத்திருந்தது. தான் விரும்பிய பெண்ணே தன் மணவாழ்க்கையை அலங்கரிக்கப்போகிறாள் என்ற மகிழ்ச்சியில் அவன் உச்சாணிக்கொம்பில் இருந்தான். நான் மட்டும் சிங்கப்பூரில் நடக்கும் திருமணத்துப் போவதற்குப் பேருந்து டிக்கெட் எடுத்து வைத்துக்கொண்டேன். திருமணத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த ஒரு இரவுப்பொழுதில் எங்களுக்கு மாப்பிள்ளையின் தந்தையிடமிருந்து ஒரு அழைப்பு வந்திருந்தது. அன்று அவர் கூறிய தகவல் தந்த அதிர்ச்சியிலிருந்து வெகு நாட்கள் என்னால் மீள முடியவில்லை. திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்திதான் அது. என்ன காரணம் என்று வினவினேன். பெண் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவள் என்றார். “இதற்குப் பையன் என்ன சொன்னான், காதல் திருமணம்தானே?” என்று கேட்டேன். “பையன் மனச அப்படி இப்படின்னு மாத்திட்டோம்,” என்றார். “பெண் வீட்டார் எதிர்ப்ப...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)