எழுத்தாளராய் இருப்பதில்...... பலருக்கு அறிமுகமான எழுத்தாளராய் இருப்பதில் வில்லங்கமும் பல வடிவத்தில் வந்து சேரும். கலை சார்ந்து இயங்கக்கூடியவர்களில் எழுத்தியக்கத்தில் இயங்குபவர்களுக்குத்தான் ஆகக் குறைந்த ரசிகர்கள் இருப்பார்கள். இவர்களுள் பலர் நம் எழுத்தைப் படித்திருக்கமாட்டார்கள் ஆனால் ஊடக விளம்பரங்கள் மூலம் நாம் அவர்களுக்கு அறிமுகமாகி இருப்போம். “சார் நேத்து ஒங்கள டிவில பாத்தேன், பேப்பர்ல போட்டோ பாத்தேன், ரேடியோவில பேர் சொன்னாங்க,” என்றெல்லாம் முகமன் பேசுவார்கள். வில்லங்கம் இவர்களிடமிருந்தே பெரும்பாலும் வந்து சேரும். இரண்டு வாரங்களுக்கு முன் என் மகள் எனக்கு குறுந்தகவல் அனுப்பி ஒருவருடைய தொடர்பு எண்ணையும் கொடுத்து “அவர் உங்களிடம் பேசணுமாம்” என்றார். அடடே இன்னொரு வாசகர் கிடைத்துவிட்டார் என்று நான் தொடர்பு கொண்டேன். “ஐயோ சார்.. நான் உங்கள அவசியமா சந்திக்கணுமே?” என்று தொடங்கினார். “சந்திக்கலாமே,” என்றேன். எனக்கும் பெருமிதம் உச்சியைத் தொட்டது. “ரொம்ப நன்றிங்க சார், ரொம்ப நாளா உங்கள் சந்திக்கணும்னு காத்துக்கிட்டிருக்கேன் சார், எப்போ சந்திக்கலாம் சார்...? வாசகரைச் சந்திக்க நே...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)