Skip to main content

Posts

Showing posts from September 27, 2009

காதல் சாத்தானின் முகவரி

அங்கெங்கெனாதபடி காதலும் கடவுளுக்கிணையாக சிதறிக்கிடக்கிறது கற்பை சூறையாட காமத்தை கண்டடைய காதல் மான் வேடம் பூண்ட மா¡¢சனாய் அலைகிறது பின்னர் மழைநீரென இருபாலர் விந்தும் நிலம் முழுதும் நிரவி சொத சொதக்கிறது சதா பாலியலை நோக்கியே 'கண்ணியமாய்' நகர்த்துகிறது தன் கவனத்தை கண்ணீர் தோல்வியின் புறமுதுகென தா¢சாய் விரவி நிற்க உடல் மூலதனம்தான் திருமணம் என்பதான பந்தத்தில் காதல் எதிர்ப்பாளர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறது மீண்டும் உடலைமட்டும் பகிர்ந்து கொள்வதாய் கணநேர சேர்க்கையில் காதல் குரங்கின் கைமலரென்றாகிறது விரும்பினால் சுயஇறப்பை வெள்ளோட்டம் அனுபவிக்க சாதி முரண்கொண்ட காதலில் குதித்துப்பார்க்கலாம் கல்யாணத்துக்குப்பின்னும் பற்பல காதல்கள் கருகலைந்து வாழ்வை நிந்திக்கிறது சுய இருப்பை முன்னமேயே அடையாளம் காணமுடியாமையால் திணறுகிறது இப்படியாகத்தான் சாத்தானின் முகவா¢யாக காதல் சாபங்களைக் கையகப்படுத்துகிறது. கோ.புண்ணியவான்

புத்தக வெளியீடுகளில் தொடர்ந்து அரசியல் ஆதிக்கம் பெருகி வழியும்

ஊத்தான் மெலிந்தாங் என்கிற ஊரில் கடந்த சுதந்திர தினத்தன்று ஒரு அறிமுகப்படைப்பாளரின் கவிதை நூல் வெளியீடு நடந்தது. 4 மணி நேரம் தூரப்பயணத்தில் அங்குச் சென்றிருந்தோம். பயணம் இவ்வளவு நேரம் பிடிக்கும் என்று சத்தியமாகத்த்தெரியாது. நான்தான் ஆய்வைச் செய்தேன். அவர் சுங்கைபட்டாணியில் உள்ள கல்லூரியில் பயிலும்போது என்னுடன் ஏற்பட்ட நட்பின் காரணத்தால் என்னையே புத்த ஆய்விற்காக அழைத்திருந்தார். தெலொக் இந்தானில் அவர் நிகழ்வு ஏற்பாடு செய்திருந்த நிலப்பகுதி நாங்கள் பயணம் செய்யச் செய்ய எங்களைவிட்டு தூரபோய்க்கொண்டே இருப்பதுபோன்று களைப்பை உண்டாக்கியது. ஊரை கண்டுபிடித்து போய்ச்சேரும்போது முக்கால் மணி நேரம் தாமதம். கூட்ட்ம் பண்டபத்தை நிறைத்திருந்தது. ஏற்கனவே அவரின் நூலிலுள்ள கவிதைகளை வாசித்திருந்தேன். முற்றிலும் திரைப்பாடல் ஆசிரியர்களின் பாதிப்பும், உணர்ச்சி பொங்களின் வரிகளும் தூக்களாகவே தெரிந்தது. வைரமுத்து அவ்ரது ஆத்மார்த்த கவிஞராக் கவிதைகள் முன்மொழிந்தன. “ தைரியமா முதுகு சொரிந்துவிடாமல் அவருடைய கவிதைகளில் உள்ள பலவீனத்தை எடுத்துச் சொல்லனவேண்டும், கவிதை தனக்கான அடுத்த களத்தைக் கண்டடைந்துவிட்டதற்கான தெளிவைய...

இறந்தவனைப்பற்றிய வாக்குமூலம்

ஆறுமுகம் ஆடுன ஆட்டத்துக்கு ஆறடி பெட்டிக்குள் அடக்கமாகிப்படுத்துக்கிடந்தான். தகவல் அறிந்து நான்கு ஆண்டுக்குப்பிறகு அவன் மனைவி நான்கு வயது மகனோடு வந்திருந்தாள்.எல்லாம் சமூக சம்பிரதாயத்துக்குப் பயந்துதான். உயிரா இருக்கும்போதுதான் அவனோட வாழ முடியவில்லை, செத்தபிறகாவது சரியா வழிஅனுப்பி வச்சிருக்கலாமில்ல என்ற ஊர் உலகம் வாய்க்கு அவல் போடக்கூடாது என்பதற்காகவே வந்திருந்தாள்.இருந்தாலும் அவன்மேல் அவளுக்கு எந்த ஒட்டுதலும் இல்லாத மனஓட்டத்தோடுதான் பெட்டிக்கு அருகில் அமர்ந்திருந்தாள். அவன் உயிராய் இருக்கும்போதே ஒரு விதவைபோல வாழ்ந்துவிட்டவளுக்கு இந்தச் சம்பவம் அவளுக்கு எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடப்போவதில்லை! வெளியே நீண்ட நாளைக்குப் பிறகு நச நசவென வானத்தைத் துளை போட்டதுபோல மழை ஊற்றிகொண்டிருந்தது. ஆமாம் மழை நல்ல சகுனமா கெட்ட சகுனமா? புழுதி மேயும் கோடையில் நல்ல சகுணம்!மழைநாள் நீண்டு போனால் கெட்ட சகுணம். மோட்டார் சைக்கில்களும் , கார்களும் சில சமயங்களில் கடந்து செல்லும் லாரிகளும் ஈவிரக்கமில்லாமல் கிளப்பிய தூசு மண்டலம் வர்ண பகவானுக்கு அஞ்சி வாய்பொத்தி மண்ணோடு அடங்கி சகதியாய் அழுது தீர்த்துக்கொண்டிருந...