4. உயிரினங்களுடனான உன்னதத் தருணங்கள். நான் லங்காவியில் இருந்த சமயம் என் மகன் நான்காம் ஆண்டில் என் பள்ளியிலேயே படித்து வந்தான். எல்லாச் சிறார்களுக்கும் இருக்கும் பிராணிகளின் மேலான ஈர்ப்பு இவனுக்கும் இருந்தது. ஒரு முறை ஒரு மணிப்புறாவைப்பிடித்து வந்து ஒரு கூட்டில் அடைத்துவைத்து பாதுகாக்க ஆரம்பித்தான். வானாளவிப்பறந்த பறவைகளை அடைத்துவைப்பது பாவச்செயல். அது அடிமைப் படுத்துவதற்கு ஈடானது என்று சொன்னேன். “இல்லாப்பா, கொஞ்ச நாள் வெளிய விட்ருவன், “ என்று எனக்குச் சமாதானம் சொல்லி வந்தான். கொஞ்ச நாள் கழித்து விடுவதற்குப் பதில் இப்போதே விட்ரலாம்ல’” என்றேன். அவனுக்கு அதில் திருப்தி இல்லை. அதனை மிக அருகில் இருந்து பார்க்கும் பரவசத்தில் அவன் இருந்தான். அகன்ற வெளியில் கைக்குக்கிடைக்காமல் பறந்து திறிந்ததை அருகில் வைத்துப் பார்க்கும் அவன் விருப்பத்துக்கு இணங்கினேன். கொஞ்ச நாள் அது வெளியில் பறந்து செல்லும் முயற்சியில் இறக்கை¨யைப் படபடத்துக்கொண்டிருந்தது. ஓரிரு வாரங்களுக்குப்பிறகு கொஞ்சம் அடங்கப் பழகிக்கொண்ட...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)