Skip to main content

Posts

Showing posts from August 12, 2012

எப்போது தருவாய் வரம்?

எப்போது வரம் தருவாய்? வெளியே இருந்துகொண்டு ஒரு அழகிய வீட்டைப் பார்ப்பது போலவே உன்னைக் பார்க்கத் துவங்கினேன் அப்போது அந்நியம்தான் அந்த வீட்டுக்கும் எனக்குமான தொடர்பு என்பது என் கண்களுக்கும் வசீகர வீட்டுக்குமான இடைவெளி மட்டுமே நாம்  நட்பாகிப் போன  தொடக்க நாட்களில் ஒரு இடைவெளி எப்போதுமே நம் உள்முகத்தை ஒளித்து விளையாடியது வார்த்தைகளுக்கு ஒப்பனை செய்து களைத்த போதெல்லாம் எதுதான் நிஜமென மௌனமாய் அழுதோம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு தருணத்திலும் ஏதேதோ பேசுகிறோம் காதலை தணிக்கை செய்துவிட்டு தணிக்கை செய்ததுவும் காதல்தானே என்று தெரியாமல் நாம் பேசிக்கொண்டிருக்கும்போது தொடர்பற்றிருந்தோம் பேசாதபோதுதான் தொடர்பில் இருந்தோம் நம் காதலை மென்றபடி வானத்தில் திடீரெனெ நட்சத்திரமொன்று இருளைக் கிழித்தது போல உன் ஒளி என்னை இருளாக்கியது வெளிச்சத்துக்காக நான் வேண்டி நின்ற போது இடைவெளி குறைத்து என்னுள் மின்னல் ஒன்றைச் பாய்ச்சினாய் நட்சத்திர ஒளியால் திணறடிக்கப்பட்டு  மீளாத போது மின்னலாய்த் தாக்கி என்னை ஊனமாக்கி விட்டிருக்கிறாய் நான் மீண்டும் பழைய நானாக வேண்டும் இந்த நக்கீரனை எரித்த சிவனே என்னைச்