தீனா முரளீதரன் நம் சமூக எழுச்சியின் பிம்பம் நம் சமூகத்தில் ஒரு விளையாட்டு வீரரைப் பார்ப்பது அரிதாகிவிட்டது.10 /15 ஆண்டுகளுக்கு முன்னால் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் மலேசியாவைச் பிரநிதித்து இந்தியர்களே ஆக்ரமித்து வென்று வந்தார்கள்.இன்று அந்தப் பெருமை மங்கி வருகிறது. பல்வேறு சமூகவியல், பொருளாதார ,இனப் பாகுபாடு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த புறக் காரணிகளையெல்லாம் மீறி புயலென எழுந்து வந்திருக்கிறார் பூப்பந்து வீராங்கனை தீனா முரளீதரன். அண்மையில் நடந்து முடிந்த காமன் வெல்த் போட்டியில் இரண்டு தங்கங்களை கழுத்தில் சூடி தன் மகிழ்ச்சியை மலேசிய மக்களிடம் பகிர்ந்திருக்கிறார். ஒரு சராசரி வாழ்க்கையை வாழ்வதிலே பரம திருப்தி கொண்டிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து போராடிப் போராடி விளையாட்டில் முன்னணி நிலையை எட்டிப்பிடித்திருக்கும் தீனாவின் உழைப்பை உரக்கச் சொல்லி மகிழ வேண்டும். ஒரு சராசரி மனிதனாக வாழ வாழவைத் தேர்வுசெய்துகொள்வது சௌகர்யமானது. ஒரு comfort zone ல...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)