1. அந்தக்கம்பத்தில் கால்வைத்தபோது அந்நிய பிரதேசத்தில் நுழைந்துவிட்டதுபோன்ற குற்றமனம் உறுத்தியது.. கம்பத்துக்குள் நுழைவது அதுதான் முதன்முறை என்பதனால்.. கரீம்தான் கண்டிப்பாய் வரவேண்டும் என்று கையைப்பிடித்து வலிய கேட்டுக்கொண்டான். எல்.சி.இக்கு நான்கு மாதமே இருக்க நானும் அவனும் மிக நெருக்கமாகிக்கொண்டிருந்தோம். என் மலாய் மொழியின் சந்தேகத்தை அவனிடமும், அவனின் கணிதப்பாட சந்தேகத்தை நானும் தீர்த்துக்கொண்டதில் உண்டான எங்கள் நட்பு, ஒரே தட்டில் சாப்பிடப் பழக்கமாகி, ஹரிராயாவுக்கு அவன் வீடுவரை என்னை இழுத்து வந்திருக்கிறது. அவன் வீடு இன்னதுதான் என்று அவன் கொடுத்த பத்தாவது மைல் கல், பள்ளிவாசல், இரு கிளைகள் ஓடிய தென்னை அச்சு அசலாய் அடையாளம் காட்ட, எங்களை வரச்சொன்ன அவனை வாசலில் காணமல் ஏமாற்றம் சின்னதாய் கோபத்தைக்கிளறியது. எனக்குப்பரிச்சியமான ஒரே முகம் கரீமுடையதுதான். நான் வீட்டு முன் உங்களுக்காகக் காத்திருப்பேன் என்று சொன்னவனைக் காணாததால் அந்த அந்நியம் எங்களுக்குள் நுழைந்திருக்கலாம். ஓங்கி வளர்ந்து நீண்டிருந்த தென்னை மரங்கள் அந்தக் கிராமத்தைத்தாங்கும் தூண்கள் போன்று நின்றிருந்தன. அப்போதுதான்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)