உணர்வுக் கொந்தளிப்பால் உடையும் கலைஞன் - காவியத் தலைவன் கலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பர்கள் பல தருணங்களில் உன்மத்தத் தருணங்களைக் கொண்டாடினாலும், போட்டிகளும் பொறாமைகளும் கலைஞர்களுக்குள் பிரிவினையைக் கொண்டுவந்துவிடும் என்பது நடைமுறை யதார்த்தம். இந்த இரண்டு வகை உணர்களும் தவிர்க்க முடியாத நிலையையே கலைஞர்களின் வாழ்வில் இரணடரக் கலந்துவிட்டவை. கலைஞர்கள் வாழ்வை ஆராயும்போது காழ்ப்பு அவர்களின் மேலான வாழ்வை கறை படியச் செய்துவிடுகிறது . ஆனால் கலையில் இதெல்லாம் சகஜம் என்று நினைத்து கடந்து வந்து விடுகிறோம். வசந்தபாலனின் காவியத் தலைவன் இந்த உணர்வு நிலையையே மையமிடுகிறது. பால்ய பருவத்தில் சித்தார்த்தை(காளியப்ப பாகவதர்) சகோதரத்துவத்துடனும், நட்புடனும் அணுக்கமாகும் பிரிதிவி ராஜ்(கோமதி நாயகம்), அவர்கள் வளர வளர அவனின் திறமையின்மேல் காழ்ப்புணர்வையும் வன்மத்தையும் வளர்த்துக்கொள்கிறான். அல்லது நாடக உலகம் காழ்ப்புணர்வை அவன் மீது தூவிக்கொண்டே இருந்து, கடைசியில் துருக்குவியலாக அவன் உள்ளுணர்வுக்குள் குவிந்து விடுகிறது. ராஜாபாட் வேடம் தரித்து நடிப்பதே தன் குறிக்கோள் என்ற கனவை...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)