கடந்த ஞாயிற்றுக்கிழமை என் நண்பர் எனக்குச்சொன்ன ஒரு அபலைப் பெண்ணின் கதையை உங்களுக்கும் சொல்கிறேன். இந்த ஒரு வாரமாய் என்னை நிலைகொள்ளாமலாக்கிய கதை. நம் வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் சம்பவங்களில் ஒன்று இது என்றாலும், இது பெண்களின் கதையென்பதால்தான் சோகம் ஒவ்வொரு முறையும் பழையதை வென்று புதிய துயரத்தைப் பெயர்த்து கொண்டுவந்து அலைக்கழிக்க வைத்துவிடுகிறது. அவள் வீட்டை விட்டு ஓடி வந்தவள். அதற்குப் பெரும்பாலும் காதலன்றி, வேறு காரணமாக இருக்க முடியாது. தன் காதலின் பிடிப்பால் அம்மாவின் அறிவுரையை தூக்கியெறிந்தவள். அண்ணன் அடியையும் வாங்கிக்கொண்டு காதலே பெரிதென தாங்கிக்கொண்டவள். குறுக்கே நின்றை அத்தனைத் தடைகளையும் உடைத்து நொறுக்கிவிட்டு சுவரேறிக் குதித்தவள். ஓடிவந்தவள் அந்தப் பட்டணத்தில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்ந்தாள். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக நகர்ந்து கொண்டிருப்தாய்த்தான் பட்டது. வானத்தில் எப்போதுமே மு...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)