சிங்கப்பூரில் லாயாங் லாயாங் குருவிகள் 3 மதியம் 12.30 மணிக்குக் தேக்காவின் அப்போலோ கடையருகில் காத்திருப்பதாகச் சொல்லியிருந்தாரபொன்சுந்தரராசு. அதற்கான இட வரைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். நான் ஊட்லண்ஸ் ரைசிலிருந்து கிராப் எடுத்து அரை மணி நேரத்தில் அப்போலோவை கடையை அடைந்திருந்தேன். அவர் வெளியே நின்றிருந்தார். "டீ சாப்பிட்டுவிட்டு போலாம்" என்று அழைத்தார். நான் பசியாறிய பின்னரும் சாப்பிட்ட பின்னரும் டீ அருந்துவதில்லை என்றேன்.(இதெல்லாம் எதற்கு என்று கேட்பவர்க்கு. என் வரலாறை எழுத நேர்ந்தால் அதில் சேர்த்துக்கொள்ளத்தான். வேறதற்கு?) அங்கிருந்து ஷானாவாஸ் கடைக்கு அவர் காரில் பயணப்பட்டோம். தேக்காவில் இறங்கவில்லை. கடைத்தெருவில் எதுவும் வாங்குகிற சக்தியை என் மலேசிய ரிங்கிட் இழந்திருந்தது. சரியாக மணி 1.00க்கு ஷானவாஸ் கடையை அடைந்தோம். அது நாசி கண்டார் கடை. ஷானாநாஸ் வரவேற்று சிராங்கூன் டைம்ஸ் பொன்விழா இதழைக் கொடுத்தார்.ஆண்டடிதழ் என்றதால் தடினமாக இருந்தது. வழவழப்பான தாளின் தெளிவான எழுத்தில் வெளியாகும் இதழ். தரமான படைப்புகள் வாசிக்கக் கிடைக்கின்றன. சிங்கப்பூர் திணையின் வரலாற்றை, பண்பாட்டை, அதன்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)