Skip to main content

Posts

Showing posts with the label தாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4

4..தாய்லாந்தில் இரண்டு நாட்கள் தாய்லாந்தின்  இப்போதைய மன்னர். விடுதி அறை ஏழாவது மாடியில் இருந்தது. அறை கண்ணாடிக் கதவு வழியாக கடல் அலைகள்  எங்ளை அழைத்து அணைத்துக் கொள்ளத் துடித்துக் கொண்டே இருந்தது. காணக் காணக் கடல் சலிப்பதில்லையே ஏன்?  நீர் இலயல்பாகவே தண்மையானது. மனதைச் சமன் செய்யும் தன்மை மிக்கது.  கொஞ்ச நேரம் கடலைப் பார்த்தால் எல்லாத் துயரும் அலையில் அடித்துச் சென்று விடும். உலகில் அதிகம் பயணிகள் செல்லுமிடம் நீர் நிலைகளாகத்தான் இருக்க முடியும். தண்ணீர் என்று அதற்குப் பெயெரிட்டதே நம் சான்றோரின் அறிவுடமையைக் காட்டுகிறது. குளித்தாலும் குடித்தாலும் பார்த்தாலும் அது தரும் பரவசம் அலாதியானது. ஐரோப்பியன் கண்டு பிடித்த மது வஸ்த்களைக்கூட நாம் லாவகமாகத் 'தண்ணி' என்று பெயரிட்டு அதிலும் 'தண்மையை' அடைந்து சமன் செய்துகொள்கிறோம். நான்தான் முதலில் அறைக்குச் சென்றேன். களைப்பில் சற்று நேரம் கண்ணயர்ந்துவிட்டு பின்னர் வெளியே போகலாம்..  முதலில் கடலோரம் நடைப் பயிற்சி செய்யலாம் என்றே முடிவெடுத்திருந்தோம். ஆனால் சுங்கச்சாவடியில் சாவடியாகக் காத்திருந்ததும், வெயிலில் பசியோட...