கோ.புண்ணியவான். எம்.ஏ.இளஞ்செல்வன் நினைவாக மலேசிய சிறுகதை எழுத்தாளர் எம் ஏ இளஞ்செல்வன் மாரடைப்பால் திடீர் மரணமுற்ற தகவல் கிடைத்தபோது நான் மலாயா பல்கலைக்கழக துணைவேந்தர் மண்டப வாயிலின் எழுத்துலக நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.டாக்டர் கிருஷ்ணன் மணியம்தான் அவர் இறந்து போன செய்தியை என்னிடம் சொன்னார். அவரின் வசிப்பிடத்துக்கு அருகாமையிலேயே வசிக்கும் எனக்கு கோலாலம்பூருக்குப்போன பிறகுதான் செய்திகிடைத்தது ஒரு துர்ரதிர்ஸ்டம். மனம் பல்கலலைக்கழக மண்டபத்திலிருந்து அப்போதே விடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த எனக்கு ஒரு இலக்கியப்பேராண்மையின் மரணம் என்னைப்பெரிதும் பாதிக்கத்துவங்கியிருந்தது. ஏனெனில் எம் ஏ இளஞ்செல்வனை ஒரு நண்பராக பார்த்ததைவிடவும், ஒரு சக எழுத்தாளனாக அவதானித்ததைவிடவும், சக தலைமை ஆசிரிய நண்பனாகப் பழகியதைவிடவும், ஒரு இலக்கிய மேலாண்மையை பிரம்மிப்போடு அன்னாந்து பார்க்கும் மன நிலைக்கு நான் தள்ளப்பட்டிருந்தேன். அவருடைய சிறுகதைகளை வாசித்த பிறகு அவரை அமானுடமாக பார்ப்பதை ஒரு தரிசனமாகவே மேற்கொண்டேன். அவருடைய சிறுகதைகள் முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கி இ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)