கங்கை அழைப்பைக் தடுக்கும் வனிகச் சாமியார்கள் அரிதுவார் மனதை ஒருநிலைப் படுத்தும் இயற்கை அழகு நிறைந்த இடம். காசிபோலல்லாமல் கொஞ்சம் சுத்தமாகத்தான் இருகிறது. கிளை நதிகள் சங்கமித்து சலசலத்தோடும் நதிநீர் நம்மை தண்மையாகவே வைத்திருக்கிறது. தண்ணீரின் இறைத் தன்மை அது. கங்கை மாதா தாய்மையின் தண்மை அது. நீர் கடவுளாகவும், தாயாகவும், அன்பைச் சொரியும் கன்னியாகவும் பல அவதாரங்களில் நம்மை தடுத்தாட்கொள்கிறது. இறை நம்பிக்கை இல்லாதவரையும் இந்த நதியென்னும் இயற்கை அன்னை ஆரத் தழுவி தன் தண்மையை சொரிந்து விடுவதில் இயற்கைதான் இறைவன் என்ற வேதாந்த கற்பிதத்தை போதிக்கிறது. மீண்டும் ரிசிகேசின் தபோவனம் விடுதிக்குத் திரும்புகிறோம். பரிமாறிய உணவு வகைகளையே திரும்பத் திரும்ப பரிமாறுகிறார்கள். பசியோடு போனால் ஏதோ சாப்பிடலாம். பசியற்றவர்கள் தட்டைத் தள்ளி வைத்து விடுகிறார்கள் . பயண ஏற்பாட்டுத் தலைவர் 'சாப்பாடு நல்லாதான் இல்ல' என்று நம்மோடு ஒத்திசைத்து ஆறுதல் படுத்தும் மனோவியல் தெரிந்து வைத்திருந்தார். ஆனால் சற்றே வராண்டா பக்கம் பார்த்தால் மலையைத் தழுவி மலர்ந்திருக்கும் பனிக்கூட்டமும்,பச்சைப் போர்வையில் முக...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)