மறுநாள் காலை குழந்தைகள் சுறுசுறுப்பாக இருந்தனர். பனிச்சறுக்கு விளாயாட்டு இடத்துப் போகலாம் என்ற முடிவால் நேர்ந்த மகிச்ச்சி காரணமாகத்தான். நல்ல வேளையாக அதற்கு சறுக்கு என்ற சொல் இருப்பதால் சறுக்கி விழுந்தாலும் தப்பில்லை என்றாகிவிடும்! விளையாட்டே சறுக்குதான் என்பதால் பனியில் சாகசம் காட்டினாலும் சறுக்குதான். சாகசம் காட்டத் தெரியாவிட்டாலும் சறுக்குதான். எனவே தாராளமாகச் சறுக்கலாம். பெண்கள் எவ்வளவுதான் வழுக்கி விழுந்தாலும் அங்கே கெட்ட பெயர் வந்துவிடாது. விடுதியிலிருந்து இரண்டு மணிநேர ஓட்டம். பட்டணத்திலிருந்து முதல் முறையாக கிராமப்புறம் வழியாக வேன் செல்கிறது. எங்கு பார்த்தாலும் வெண்மை பூசிக் கிடக்கிறது பூமி.பனி பெய்து கெட்டி தட்டிப்போய்க் கிடக்கிறது. சாலையில் வாகனங்களைத் தவிர வெளியே மனித சலனமே இல்லை. விவசாய நிலம்போலத் தெரிகிறதே தவிர, மனித நடமாட்டமே இல்லை.ஆங்காங்கே சுவர்க்குடிசைகள் இருக்கின்றன. விவசாயிகளுடையது. கடும் குளிருக்குப் பயந்து உள்ளே பதுங்கி இருக்கிறார்களோ என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை. அவர்கள் ஏகழ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)