2. தாய்லாந்தில் இரண்டு நாட்கள். டானோக்கில் பானுவுக்காக காத்திருந்த வேளையில் கழிப்பிடம் தேடி அலைந்தேன். பொதுக் கழிப்பறையைக் காணவில்லை. அப்படியே இருந்தாலும் அது அழையா விருந்தாளியாய் நம்மை விரட்டும். ஒரு விடுதி இருந்தது . உள்ளே நுழைந்து பாத்ரோம்' என்றேன் . அவள் வலது பக்கம் கையை காட்டினாள். படியேறியதும் சீருடை அணிந்த பெண்கள் பலர் லோபியின் சோபாவில் அமர்ந்தும் படுத்தும் கிடந்தனர். என்னைப் பார்த்ததும் எழுந்து " கம் கம்" என்று அன்பொழுக அழைத்தார்கள். நான் அங்கிருந்து உடனே வெளியேறிவிட்டேன். இளம் வயதில் என் நண்பனை கொனோரியா நோயில் பார்த்த அச்சம் என்னை விரட்டியபடியே இருக்கிறது) "ஏன் கழிப்பறை போகவில்லை?" பானு கேட்டார். அங்கே பெண்கள் சீருடையில் அமர்ந்து என்னை அழைத்தார்கள் என்றேன். எனக்கு ஒவ்வவில்லை திரும்பிவிட்டேன் என்றேன். தாய்லாந்தில் இதெல்லாம் சகஜம்யா? அவளுங்க அவளுங்க வேலைய செய்றாளுங்க, நீங்க உங்க வேலைய முடிச்சிட்டு வரவேண்டியதுதானே என்றார். "என்னால் அப்படி முடியாது," என்றேன். அவளுங்க ஏன் சீருடை போட்டிருக்காளுங்க? சீருடை அணிவது ஒழுங்கின் குற...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)