2. விரட்டுகின்ற மிருகங்கள் கோயில்களுக்குச் செல்லும் பல தருணங்களில் அங்குள்ள கழிவறைக்குச்செல்வதைத் . தவிர்த்திருக்கிறேன். இருப்பினும், என் துரதிஸ்டம் சமீபத்தில் கழிவறைச் சுத்தத்தையும் கண்காணிக்கவேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன். என் மகனின் திருமணம் அதிகாலையில் ஒரு விநாயகர் கோயிலில் நடப்பதென முடிவெடுக்கப்பட்டு அக்குறிப்பிட்ட கோயிலைப் பார்ரக்ச்சென்றேன். கோயிலில் முன்பணம் கட்டிவிட்டு எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்யும்படி கூறிவிட்டு வந்துவிட்டேன். மணநாளுக்கு மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும்போது கோயில் அலங்கரிப்புக்கான ஆயத்த வேலகளில் இறங்க ஆரம்பபித்தோம். பலர் கூடும் இடமாயிற்றே கழிவறைச் சுத்தத்தையும் கண்காணிக்கவேண்டும் என்பதற்காக அந்தப்பக்கம் போனேன். கழிவறையை நெருங்கிய தருணத்தில் இங்கே வராதே என்று மிருகத்தைப்போல என்னை விரட்டியது. அதன் துர்வாடை மொழியில் நான் பின் வாங்க ஆரம்பித்தேன். அப்போது என்னிடம் கோயில் பயன் படுத்துவதற்க்காக வாடகைப்பணம் வாங்கிய அலுவலரும், ஒரு பெண்மணியும் இருந்தனர். கழிவறையைப்பற்றி முறையிட்டுவிட்டு திருமணத்தன்று அது தூய...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)