Skip to main content

Posts

Showing posts with the label ரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை

ரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை

ரெ.கா கதைகளின் அழகியல் கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை பின்னால் எங்கோ பார்த்துக் கொண்டிருப்பவர். ஒரு படைப்பாளரை  அவருடைய மெய்யியல் சிந்தனை வெளிப்பாட்டு அளவுகோல் கொண்டும் நிறுத்துப் பார்க்கலாம். அதிகமாக வாசிக்கின்ற ஒருவனுக்கும் தர்க்கரீதியாகச்  சிந்தித்து முடிவெடுக்க முடியும். பழுத்த வாழ்க்கை அனுபவமுள்ளவர்கள் தங்கள் பேசும்போது தத்துவமாக கொட்டுவதைப் பார்த்திருக்கிறோம். காதலில் தோல்வியுற்ற இளசுகளின் வாயில் தத்துவ வெளிப்பாடு இருக்கும். காதலித்த அதே பெண்ணைத் திருமணம் முடித்தவர்கூட தாடி வளர்த்து சலித்துப் போய் தத்துவத்தில் வந்து நிற்பார் . நவீன அரசியலைக் கட்டமைக்கும் இடது சாரிகளுக்கும், ஆன்மிக ரீதியாக வாசித்து முதிர்ச்சி பெற்றவர்களுக்கும் மெய்யியல் சிந்தனை வரும். பேச்சாளர்களின் பேச்சை செவிமடுப்பவன் மூலமும் தர்க்க ரீதியாகச் சிந்தித்து  முடிவெடுக்க முடியும். மெய்யியல் என்ற சொல்லின் பொருளை எளிமையாகச் சொல்வதென்றால் தெளிவான சிந்தனைக்கு வருதல் எனலாம். எது சரி எது தவறு? எது சரியான பாதை எது தவறான பாதை என்று தெரிந்து கொள்வதுதான் மெய்யியல். ஒரு தேர்ந்த படைப்பாளனின் ...