ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் தமிழ்க்கல்வி மிகுந்த சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. அதன் நீட்சியாக இன்றைக்கும் வேறொரு வடிவமெடித்து தமிழ்க்கல்வியின் நிலைப்பாட்டை அச்சுருத்தி வருகிறது. மலேசியக் கல்விச்சான்றிதழ் (spm) சோதனையில் 2010 முதல் 10 பாடங்கள் மட்டுமே எடுக்கமுடியும் என அரசாங்கத்தின் அதிரடி முடிவில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய இரு பாடங்களின் மேலான மாணவர்களின் ஆர்வம் சிதைவுறும் கட்டத்தை அடைந்ததுள்ளது எப்போதுமே தமிழ் மொழி தமிழ் கற்ற பலருக்குச் சோறுபோடும் மொழியாக இருந்தது கிடையாது.( தாய் மொழியை அப்படிப் பார்ப்பதால்தான் அதன் சிதைவுக்கும் அழிவுக்கும் நாமே காரணமாகி விடுகிறோம்) மலேசியாவில் மட்டுமல்ல , சிங்கப்பூர், தமிழர்களையே கொன்று குவித்த சிரி லங்கா, ஏன் தமிழ்நாடும் அதே நிலையைத்தான் எதிர்நோக்குகிறது. தமிழ் மொழி செம்மொழி தகுதியை அடைந்த பின்னரும் தமிழகத்திலும் அதன் தலயெழுத்தை மாற்றமுடியாது இருப்பதானது தமிழுக்கே இருக்கும் தனித்த பெருமை. மலேசிக் கல்விச் சான்றிதழ் சோதனையில் கூடிய பட்சம் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற அரசின் அறிவிப்பையொட்டி, 12 பாடங்களாக உயர்த்த வேண்ட...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)