சிறுகதை படைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள் 1 கவிஞர் சோழவேந்தனின் ‘கரும்புத்தோட்டம்’ நூல் வெளியீட்டு அழைப்பிதழ் சேர்ந்த சில மணி நேரத்திலேயே அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பும் வந்தது. தபால் மூலம் வந்து சேரும் நேரத்தை ஜோசியரிடம் கணித்திருப்பார் போலும்! அழைப்பிதழ் கிடைத்திருக்கும் என்றும் நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு வழங்கும்படியும் பின்னூட்டத் தகவலுக்காக போன் செய்தேன் என்றார். அவர் நூல்வெளியீட்டை சற்றுத் தடபுடலாகவே செய்யவிருப்பதாகச் சொன்னபோது எனக்குக் கொசுறாக கல்யாண மேளம் நாதஸ்வர ஓசை கேட்டது. உற்றார் உறவினரையும் நண்பர்களையும் எழுத்தாளர்களையயும், தான் வாடிக்கையாளனாக இருக்கும் மீன்காரன், மளிகைக் கடைக் காரர் தன்னைச் சிகை அலங்காரம் செய்பவர், தினசரி கடந்து போகும்போ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)