11. எட்டு மணி நேர ஓட்டம். டில்லியை இரவு வேளையில்தான் பார்க்கும் சந்தர்ப்பம் கூடியிருந்தது. காலையில் கொஞ்சம் பேருந்து சன்னல் வழியே அவதானிப்பது எட்டி இருந்தே ஒருதலையாய் காதல் செய்வது போலத்தான். சுற்றிப்பார்ப்பதை விட கையில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகளைக் கடைத்தெருக்களில் அபிஷேகம் செய்வதில்தான் பயணத்தின் மோட்சத்தை அடையமுடியும். "கடைசி நாள்ல சாப்பிங்கு டைம் போதுமா?" என்ற ஏக்கக் குரல் எழுப்பாத பெண்கள் குறைவு. பிளைகளுக்கும் பேரப்பைள்ளைகளுக்கும் வாஙக வேண்டும் என்றே பையில் இருக்கும் ரூபாய்கள் தூது விட்டுக்கொண்டிருந்தன. பேருந்து சன்னல் வழியே நோக்கும் ஏக்கக் கண்கள் மொழி அறியாதவனா நான்? கடைசி நாளில் காலை பத்து மணி முதல் நான்கு மணிவரை ஒதுக்கியிருந்தார்கள். எல்லாம் எப்படி அமையப் போகிறது என்ற கொசுறாக பயம் வேறு தலைநீட்டியபடி இருந்தது. பேருந்து இம்முறை நேராக ஜெய்ப்பூர் செல்கிறது. 2002ல் முதல் முறை வந்தபோது பெங்கலூரிலிருந்து டில்லிக்குப் பறந்து பின்னர் ஒரு வாகனத்தில் ஜெய்ப்பூர் போனோம். இரண்டாவது முறை நேராக டில்லிக்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)