அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் என் அம்மாவை ஐம்பத்தைந்து வயதில் வேலையை விட்டு நிறுத்தியிருந்தார்கள். அம்மா அப்படியொன்றும் அலுவலக வேலையில் நான்கு இலக்க சம்பளம் எடுத்தவரில்லை. தோட்டப் பாட்டாளியாக ‘மம்மட்டி’ வேலை செய்து வந்தார். அவர் வேலையிருந்து நீக்கப்பட்ட நாளில் அம்மாவின் முகத்தில் ஆழமான துயரம் படிந்திருந்தது. அந்த இக்கட்டான தருணத்தில் நாங்கள் நான்கு பேர் படித்துக்கொண்டிருந்தோம். பட்டணத்துக்குப் போக வர கட்டணச்செலவு , மாதந்தோறும் கட்டவேண்டிய பள்ளிக்கட்டணம், வீட்டுச்செலவு என ஒரு பசி தீரா அரக்கனைப்போல அம்மாவின் சம்பளத்தையே விழுங்கிக்கொண்டிருந்த வேளையில் வயது காரணமாக ‘நோட்டீஸ்’ கொடுக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகி இருந்தது. எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்றா புதிரான வினாவே அம்மாவின் முகத்தில் கூடுதல் சோகத்தை பதித்திருந்தது. அம்மா நின்ற பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே அப்பா வேலையில்லாமல் போயிருந்தார். ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)