அது அது செந்தமிழே உயிரே நறுந்தேனே செயலினை மூச்சினை உனக்களித்தேனே நைந்தாயெனில் நைந்துபோகும் என் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்கும்தானே நண்பர்களே பயணங்கள் இருவகை உண்டு . ஒன்று உல்லாசப்பயணம் இன்னொன்று சாகசப் பயணம் . உல்லாசப்பயணத்தைத்தான் பெரும்பாலானோர் மேற்கொள்வார்கள் . சாகசப் பயணங்களை சிலரே மேற்கொள்வர் . ஏன் பலர் சராசரிப் பயணத்தை விருபுகிறார்கள் ? ஏனெனில் அதில் சவால்கள் இல்லை . ஜாலியா போய்ட்டு ஜாலியா வந்திடலாம் . ஒரு பிரச்னை இல்லை . ஆனால் சாகசப் பயணம் சவால்கள் நிறைந்த து . மர்மங்கள் நிறைந்த து . வேலியில போற ஓணான வேட்டிக்குள்ள பிடிச்சு போட்டுக்கிட்ட மாதிரி . அல்லது எலிகப்டற்ல போற சனியன ஏணி வச்சி எறக்கின மாதிரி . ஆனால் இந்த சவால்கள்தான் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய அனுபவங்களைக் கொடுப்பது . ஒரு ஒரு நேர்காணலைக் கேட்டேன் . ஒரு திரைத்துரை இயக்குனர் . படம் எடுத்து மேலே வர முடியல . சாதிக்க முடியல . நான் தோல்வி கண்ட இயக்குனர்தான் . ஆனால் என மடி நிறைய பழுத்த அனுபவங்கள் உள்ளன . நான் நோய்வாய்ப்பட்டு இன்ன...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)