(மலேசியக் கவிதைச்சிற்றிதழ் ‘மௌனத்தில்’ வெளியான என்னுடைய பேட்டி) `கோ.புண்ணியவானோடு ஒரு நேர்காணல் கே.பாலமுருகன். 1. உங்களை கவிஞராக அறிமுகப்படுத்தியது எந்தக் கவிதை? அக்கவிதை உருவான தருணங்களையும் அனுபவத்தையும் சொல்லவும். மலேசியாவில் 1974ல் புதுக்கவிதைகள் ஒரு புரட்சிப்பாய்ச்சலோடு பிரவேசிக்கிறது. அதன் தாவலைத் தடுத்து நிறுத்த மரபு சார்ந்த பற்றாளர்கள் எதிர்வினைப்புரட்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இலக்கிய வடிவங்கள் எப்போதும் யாரோடும் சமரசம் செய்துகொள்வதில்லை. அது தனக்கான இடத்தைக்கைப்பற்றாமல் போனது கிடையாது. ஐரோப்பிய இலக்கியத்திலிருந்து வந்த நாவல், சிறுகதை, புதுக்கவிதை தமிழ் இலக்கியப்பரப்பில் தனக்கான இடத்தை கைப்பற்றி கோலோட்சி வந்திருக்கிறது. புதுக்கவிதை பல போராட்டங்களைச் எதிர்கொண்ட ஒரு பத்தாண்டுகளில் மலேசியாவில் தனக்கென தனியொரு நாற்காலியை இருத்திக்கொண்டது. அந்தப் பத்தாண்டுகாலப் போராட்டங்களைத் தீவிரமாக அவதானித்து வந்த நான் அதன் எழுத்து வீச்சில் கவரப்பட்டு புதுக்கவிதை எழுதத்துவங்கினேன். ஆரம்பத்தில் உணர்ச்சி வேகத்தில் எதையாவது கிறுக்கி அது பிரசுரமாகும்பட்சத்தில் அதனையே சிறந்த படைப்பூக்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)