நோக்கம்: ஜூலை 28 காலை 9.25க்கெல்லாம் நான் வேலை செய்து ஓய்வு பெற்ற கணேசர் கலாசாலையில் இருந்தேன். அதிகாலை என்னுடைய மாமுல் மருத்துவ பரிசோதனையைச் சுங்கைப்பட்டாணி மருத்துவ மனையில் முடித்துக்கொண்டு, பசி எடுத்ததால் காலை உணவை வந்தான் மீயை சீனர் உணவகத்தில் முடித்துக்கொண்டு மனைவியை மீண்டும் வீட்டில் விட்டு விட்டு பள்ளியை நோக்கி பயணமானேன். நான் காண்ட்ரக்ட் ஆசிரியர் வேலைக்கு மனு போடுவதால் என்னுடைய கடைசி கியூ 8 பெறுவதற்கு அங்கே சென்றேன். வருகைப்பொருள் நான் ஓய்வு பெற்று ஐந்தரை ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் கோப்புகளைத் தேடி கியூ எட்டை உருவி எடுக்க குமாஸ்தாவுக்கு அவகாசம் கொடுத்து மறுநாள் அங்கு பிரசன்னமானேன். அப்பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியர் கனகம் என்னைப் பார்க்கவேண்டும் என்று குமஸ்தாவிடம் தகவல் சொல்லியிருந்ததால் கியூ எட்டைப் பெற்றுக்கொண்டு தலைமை ஆசிரியர் அறைக்கதவைத் தட்டினேன். இதற்கு முன்னர் தலைமை ஆசிரியரைப்பற்றி அங்கு பணிபுரியும் (என்னிடமும் பணி புரிந்த) ஆசிரியர்க...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)