2. ஜோர்ஜ்டௌன் அனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும் ஜெயமோகன் சட்டைக்குப் பொத்தான்கள் போட்டவாறே சற்று நேரத்தில் வெளியே வந்தார். நலம் விசாரித்தபடியே நான் வைத்திருந்த என் கையறு நாவலை அவரிடம் நீட்டினேன்.தன் வலைத்தளத்தில் கையறு நாவலைப்பற்றி மூன்றுமுறை எழுதியிருந்தார். நவீன், சு.வேணுகோபால் போன்ற நம்பகம் மிகுந்தோரின் ரசனை விமர்னசங்களை வாசித்தபின்னரே மலேசியாவின் முக்கியமான நாவல் கையறு என்று ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.ஆனால் அவர் அதனை வாசித்திருக்க வாய்ப்பில்லை என்று நான் கனித்தது சரியாக இருந்தது. "ஜெ நான் ஜீவ கரிகாலனிடம் உங்களுக்கு ஒரு பிரதியை அனுப்பச்சொல்லியிருந்தேன்" என்றேன். "இல்லையே ஒரு தபாலைக்கூட மிஸ் பண்ணமாட்டேன், வரவில்லையே" என்றார். "அதனால்தான் எடுத்து வந்தேன் " என்றேன். "யாருக்கும் கொடுக்க மட்டேன்னு மறைச்சி மறைச்சி வச்சிருக்கீங்களாம்." என்றார். " இல்லையே மலேசியாவில் மட்டும் 700 பிரதிகள் விற்றிருக்கின்றன, உங்கள் பதிவால் தமிழ் நாட்டிலும் பரவலான வாசிப்புக்குப் போயிருக்கிறது,"என்றேன். "நாவலைக் கையில் வாங்கியவர் நூல்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)