Skip to main content

Posts

Showing posts from November 6, 2011

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்.

10. மழையில் நனையும் வார்த்தைகள். நான் சமீபத்தில் ராஜஸ்தானின் தலை நகரமான ஜெய்ப்பூருக்குச் சென்றிருந்தேன். நூற்றுக்கண்கான ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த மன்னர்களால் கட்டப்பட்ட பெரும் கோட்டைகளைக் கொண்ட ஒரு புராதன ஊர் ஜெய்ப்பூர். நாம் ஊருக்குள் நுழையும் போதே கோட்டைகள் நம்மை வரவேற்கும். ஊருக்குள் நுழைந்தவுடன் கோட்டைகள் நம்மை சூழ்ந்துகொள்ளும். ஒரு தலை நகரமாக இருந்தாலும் புராதன கட்டமைப்புக் கொண்ட நகரமாகத்தான் அதனை நாம் அவதானிக்க முடியும். நூதன கட்டடங்களையோ, பட்டணத்துக்கே உள்ள நேர்த்தியையோ , குறிப்பாக பச்சை வெளியையோ நாம் பார்க்கமுடியாது. நம் ஊரில் நாம் காணும் பட்டண வளாகத்துக்குள்ளிருக்கும் பச்சை புல் வெளியையும் பூந்தோட்டங்களையும் கண்டிப்பாய் ஜெய்ப்பூரில் பார்க்க முடியாது. ஏனெனில் அது மழை காணாது வானம் பார்த்த பூமி. ஜெய்ப்பூரிலிருந்து நூறு கிலோமீட்டர் துரத்தில்தான் புகழ்பெற்ற பாலைவனமிருக்கிறது. பாலைவனம் என்று சொன்னாலே மழைக்குப் பெரும் எதிரி என்றே பொருள் கொள்ளலாம். ஜெய்ப்பூரில் மழை பெய்யாமல் இருப்பதற்கு அந்த நகரைச்சுற்றியுள்ள மாபெரும் கல் மலைகள் ஒரு காரணமாக இருக்கிறது. மழை மேகங்களைத் தடுத்து நி...