மலேசியச் சிறுகதைகள் ஒரு பார்வை என் பள்ளிப்பருவம் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை. வீட்டில் வறுமை கோலோச்சியதே என் எல்லா பின்னடவுகளுக்கும் காரணமாக இருந்து வந்தது. என் தந்தையார் நான் படிவம் இரண்டு படிக்கும்போதே வேலையிலிருந்து ஒய்வு பெற்றிருந்தார். அம்மா உழைத்தால் மட்டுமே ஆறு வயிறுகளுக்கு உணவளிக்க முடியும் என்ற இக்கட்டான நிலை. என் இடைநிலைப் பள்ளிக் கல்வி பொருளாதரச் சிக்கலால் இடையிலேயே முறிந்துவிடும் ஆபத்தை எந்த நேரத்திலும் எதிர் நோக்கிக்கொண்டிருந்தது. 1960 களில் அரசு இடைநிலைப் பள்ளிகள் ஸ்கூல் பீஸ் விதித்திருந்தது. கல்விக் கட்டணத்தை ஸ்கூல் பீஸ் என்று சொல்லும்போதுதான் அதன் கடுமை உறைக்கும் .மாதம் பன்னிரண்டு வெள்ளி என்று நினைக்கிறேன். ஆண்டு தோறும் பாடப் புத்தகங்களை பணம் கொடுத்து வாங்கியாக வேண்டும். எஸ்டேட்டிலிருந்து பள்ளிப் பேருந்துக்கு மாதம் கட்டணம் கட்டியாக வேண்டும். எனக்கு கைச்செலவுக்குக் காசு, பள்ளிப் ப...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)