7. நினைவைத் தொடரும் தீராத நிழல் நான் பள்ளியில் இருந்த சமயம் ஒரு முறை எனக்கொரு தொலை பேசி அழைப்பு வந்தது. அலுவலகத்தில் எனக்கு வரும் அழைப்புகள் அநேகமாக வேலை சம்பந்தப்படதாகவே இருக்கும். மேலதிகாரிகள், சக தலைமை ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்தே பள்ளி தொலைபேசியை ரீங்காரமிடச் செய்யும் . ஆனால் , அன்று என்னைத் திகைப்புற வைத்த அழைப்பு ஒரு பெண்ணினுடையது. என் பதின்ம வயதில் என்னைக்கிரங்கடித்து , என்னை திக்குமுக்காடச்செய்து , என்னை நடைப்பிணமாக உலவவிட்டு , பின்னர் என் கைக்குக் கிட்டாது போன அதே பெண்ணினுடைய அழைப்பு. அவள் தன் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் என் ஞாபகக்கிடங்கு எங்கும் அலைந்து தேடாமல் பட்டென்று அவளை என் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது. இத்தனைக்கும் அவளைப்பார்த்து 30 ஆண்டுகளுக்கு மேல் கடந்திருந்தது. முப்பது ஆண்டுகள் கடந்தாலும் அவளை அதிசயாமாய் அதே பதின்மவயதுப் தோற்றத்தையே காட்சிப்படுதிக்கொண்டிருந்தது நினைவு! அவளின் அப்போதைய ஐம்பது வயது மதிக்கத்தக்க பிம்பத்தைக்கூட மனக்கண்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)