ஜெகே கைவிடப்பட்டவர்களின் கதைசொல்லி தமிழில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை 50 களிலும் 60களிலும் அதிகம் எழுதப்படாமலேயே இருந்தது . தலித்துகள் அல்லது தீண்டப்படாதவர்கள் எழுத்திலக்கியம் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. எழுத்து மூலமாகவும் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே இருந்தார்கள். பாரதிக்குப் பின்னர் புதுமைப்பித்தன் காத்திரமாக முன்னெடுத்தார் . பாரதியாரை ஆதர்ஸமாகக் கொண்டதனாலேயே ஜெயகாந்தனால் அதனை அடியொற்றி வளர முடிந்தது. பாரதி காலக்கட்டத்துக்குப் பிறகு புதுமைப்பித்தன் அவர் வழித்தோன்றலாக உருவாகிறார். உரை நடையில் நவீன இலக்கியத்தை எழுதவேண்டுமென்று முனைப்புடன் இயங்கியவர் புதுமைப்பித்தன் . அவர் காலக்கட்டத்துக்குப் பிறகு ஒரு பெரும் எழுத்துப் புயலாகக் கிளம்பியவர் ஜெயகாந்தன் . மற்றெல்லா சமகால புனைகதை எழுத்தாளர்களையெல்லாம் பின்தள்ளி தன்னை முற்போக்கு சித்தாந்தம் கொண்ட படைப்பாளனாக அடையாளம் காட்டிக்கொள்கிறார் ஜெகே . அவருடைய எண்ணற்ற சிறுகதைகள் , நாவல்கள் இதற்குச் சான்று . என்னை மிகவும் பாதித்த கதை ஒன்றிலிருந்தே நான் ஜெகேவை தேடத் துவங்குகிறேன் . ஜெ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)