ரெ.கா கதை மூன்று 20.3.16ல் மலாயா பல்கலையில் ரே.கார்த்திகேசு இலக்கிய அரங்கம் நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு அவரின் சிறுகதைகளின் ஊடாக ஒரு பயணம் ரெ.காவின் ‘கொப்புளங்கள்’- சிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல் ஒருநாள் பள்ளி மாணவி ஒருவரை அழைத்துக்கொண்டு என் அறைக்குள் நுழைந்தாள் ஒரு வகுப்பாசிரியை. மாணவியின் வலது கையைப் பிடித்து என்னிடம் காட்டினாள். அவள் வலது உள்ளங்கை முழுதும் கொப்பளித்துப் புண்ணாக இருந்தது. பிஞ்சுக் கையின் வெள்ளைச் சதை வெடித்து நீர் வடிந்து கொண்டிருந்தது. என் கண்கள் காயத்தின் மேல் நிலைக்க மறுத்தன. நான் ஆசிரியை முகத்தைப் பார்த்தேன். “அவளால எதுவும் எழுத முடியாம இருந்தத கவனிச்சப்போ தான் இந்தக் காயத்தப் பாத்து, துடிச்சுப் போய்ட்டேன் சார் !” என்றாள். நான் மாணவியை என்ன நடந்தது என்று கேட்டே...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)