பிங்சின் பின்பற்றக்கூடிய எடுத்துக்காட்டு (PINKS (Penang International kids storytelling Festival) மலேசியாவில் வாசிப்புப் பழக்கம் அருகியும் சுருங்கியும் வருவதை கவனிப்பார் இல்லை என்றே தோன்றுகிறது. சோதனை முடிவுகள் மட்டுமே வாழ்க்கையை வண்ணமையமாக்கும் என்ற முன்முடிவுகளும் நம்பிக்கையும் தமிழ்ச் சமூகத்தில் முத்திப்போய்க் கிடக்கிறது. இது பைத்தியம் முத்திப் போனதற்கு ஈடாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். ஒரு பன்னிரண்டு வயது பள்ளி மாணவச் சிறாரின் மேல் சிறந்த சோதனை முடிவுகளை திணிக்கப்பார்க்கும் சமூகச் செயல்பாடு, இச்சமூகத்தின் உன்னத எதிர்காலத்துக்கும் உலை வைக்கும் காரியமாகும். வெறும் ஏட்டுக் கல்வியும், அதன் பிரதிபலன்களும் மட்டுமே சிறந்த வாழ்க்கையைக் கொடுத்துவிடாது. முடிவுகளை நிர்மாணிக்க நாம் கலை சார்ந்த அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த மறுக்கிறோம், அல்லது முற்றாகப் புறக்கணிக்கிறோம் என்பதே உண்மை. இந்த முன்முடிவுகள் கண்மூடித்தனமானது. இன்றைக்கு நம் இளைஞர்களிடையே பிற்போக்குத்தனங்கள், வன்முறைகள் ஏன் நிகழ்கின்றன்?, முன்பு போல விளையாட்டுப் போட்டி உலகத்தில் ஈடுபடாமை, கலை சார்ந்து கல்வியை முன்னெட...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)