Skip to main content

Posts

Showing posts from March 17, 2013

இனப்படுகொலையும் அரசை நம்பாத மாணவர்களும்

( முகநூலிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது)   மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்! ம.செந்தமிழன் மாணவப் போராளிகளே, 2009, மார்ச் மாதம் நடந்திருக்க வேண்டிய போராட்டங்கள், இப்போது நடக்கின்றன. அந்தக் காலத்தில்தான், புலிகளின் படையை இந்தியச் சதி சுற்றி வளைக்கத் தொடங்கியிருந்தது. இந்தியக் கடற்படை, இலங்கைத் தீவைச் சுற்றி நின்று அரண் அமைத்து கடற்புலிகளைக் காவு வாங்கியது. கடல் வழியே தப்பிச் செல்ல முனைந்த பொதுமக்களுக்கும் கடல் வழியை மறுத்தது இந்தியக் கடற்படை. நிலப்பகுதிகளோ, சிங்களப் படையின் பெரும் எண்ணிக்கையினால் சுற்றி வளைத்து மூடப்பட்டது. வீரம் செறிந்த தாக்குதல்களைப் புலிகள் நடத்தியபோதும், வான்வழியே பறந்து கொத்துக் குண்டுகள் வீசி, புலிகளின் அனைத்து நிலைகளும் அழிக்கப்பட்டன. ஒருபுறம் கிளிநொச்சியிலிருந்து மாதக் கணக்கில் நடந்தே வந்து சேர்ந்த பொதுமக்கள், மறுபுறம் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் முற்றுகை. புலிகளின் அப்போதைய நிலையை உலகின் எந்த மனிதனாலும் கற்பனையிலும் காண இயலாது. உணவுப் பஞ்சம், தண்ணீர் பஞ்சம், மருந்துகள் இல்லை, கை கால்கள் முறிந்தவர்க...