10.பிடிப்பு
மூன்று நாட்களாக முதுகின் வலக்கை பக்கம் 'பிடிப்பு'. அதனால் ஒரு பிடிப்பாய் இருந்து பயணக் கட்டுரையைத் தொடரமுடியவில்லை. இப்போது தீபாவளி வேறு கலைகட்டிவிட்டது. பார்ப்போம்.
பார்க்கும் தூரத்தில் இருப்ப்து லாஹூர் (பாகிஸ்தான்) ஸ்டேடியம்
அம்ரிஸ்டாரில் ராணுவ அணிவகுப்பு மிகப் பிரபலமானது. தினசரி நடந்துகொண்டே இருக்கிறது. மக்கள் கூட்டம் குறையவே இல்லை. பாகிஸதானின் மிகப்பெரிய இரண்டாவது நகரம் லாகுர். பஞ்சாபின் அம்ரிஸ்டாரும் பெரிய நகரம்தான். லாகுருக்கும் அம்ரிஸடாருக்கும் 28 மைல்
இடைவெளிதான். சரியாக எல்லையில் நடக்கும் இந்த ராணுவ அணிவகுப்பைப் பார்க்க பாகிஸ்த்தான் எல்லையைத்தாண்டி எட்டிப்பார்த்தால்
அங்கேயும் பார்வையாளர்கள் நிரம்பிக்கிடக்கிறார்கள். என்றைக்கு இந்தையாவின் ஒரு பகுதியாக இருந்த ஒரு நிலப்பகுதி பாகிஸ்தானாகப் பிரிந்து போனதோ அன்றிலிருந்தே எல்லைப் போர் தொடங்கிவிட்டது. காஸ்மீர் யாருடையது என்ற போர்.அதனாலேயே பயங்காரவாத ஊடுறுவல் இந்தியாவை நிம்மதியாக இருக்கவிடவில்லை. மீண்டும் இந்திரா காந்தி போல இரும்புப் பெண்மணி ஒருவர் வந்தால் பாகிஸ்தானின் நீண்டுகொண்டே இருக்கும் வாலை நறுக்கியே இருப்பார். மன்மோகன் சிங் சோனியாவில் விளையாட்டு பொம்மை. சோனியா கிழித்த கோட்டுப்பக்கமே போகமாட்டார். தாண்டுவதென்ன?
அவரைப் பற்றி ஒரு நகைச்சுவை படித்தேன். என்ன பொருத்தம் போங்கள்!
இந்தியாவில் தலைவர்கள் இறந்தபிறகே சிலை வைப்பார்கள், இப்போதுள்ள பிரதமரே சிலையாய் வாய்த்துவிட்டபிறகு அவருக்குச் சிலை வைக்கவேண்டிய அவசியமிருக்காது என்பதே அந்தப் பிரசித்தி பெற்ற நகைச்சுவை.
அம்ரிஸ்டாரில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை மீண்டும் ரயில் பிடித்தாக வேண்டும். போகவர ஏற்கனவே டிக்கட் எடுத்தாயிற்று. அம்ரிஸ்டார் ரயில்
நிலையத்திற்குப் போகுமுன்னர் மிகப் புகழ்பெற்ற லட்சும் நாராயணன் கோயிலைப் பார்த்துவிடலாம் என்றே முடிவெடுக்கப்பட்டது. அம்ரிஸ்டாரில் சுத்தமாக பராமறிக்கப் பட்டுவருவது இந்தக் கோயிலும் அதன் வளாகமும் மட்டும்தான். பொதுவாகவே லட்சுமி நாராயணன்கோயில்கள் இந்தியாவிலிம் மற்ற மற்ற நகரங்களிலும் தூய்மையாகவே வைத்திருக்கிறார்கள் .
மாதாக் கோயில் மாதிரியான கோபுரக் கூம்பு வடிவில் விண்ணை குத்தத் தயாராக இருப்பதுபோலவே காட்சி கொடுக்கிறது. உள்ளே உடகார்ந்து தியானம் செய்யலாம். மக்கள் கூட்டம் அதிகமில்லை.
லட்சுமி நாராயணன் கோயில்
வெளியே வந்தால் அங்காடிக் கடைகள் நிறைய காணக்கிடக்கின்றன. அதில் ஒரு கடை உருண்டயாக பொறித்த பதார்த்தம் ஒன்றை பச்சை நிறத் தண்ணீரி முழுக்க நனைத்து பரிமாறுகிறார்கள். அதனை அத்துனைச் சுவைத்து உண்ணும் வாடிக்கையாளர்களை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் சத்தியமாய்ச் சொல்கிறேன், பார்ப்பதோடு சரி அதனை உண்ணும் அளவுக்கு மனதில் தில் உண்டாகவில்லை. கடைக்காரன் பொறித்த அந்த உருண்டைகளை வெற்றுக்கையால அந்தத் திரவத்தில் நனைக்கும் போது அவன் கையும் நனைவதை பலமுறை பார்த்த பிறகு, வேண்டாம் வில்லங்கம் என்றே எட்டி நின்று வேடிக்கைப் பார்த்தேன். ஏன் எலிகப்டர்ல போற வைரஸ் கிருமிய ஏணி கொடுத்து எறக்கி , வைத்தில கொட்டிக்கிட்டு குத்துதே கொடையுதேன்னு அலறணும்?
ரயில் நிலையத்தில் எந்நேரமும் மக்கள் கூட்டம் குறையாது இருந்தது. தரையில் பைகளை வைக்க முடியாது. பேருந்திலிருந்து எல்லாரும் இறங்கும் வரை கையில்தான் வைத்திருக்க வேண்டும்.ஏனெனில் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற துப்பப் பட்டிருந்தது வெற்றிலை, பான் பராக் மென்ற எச்சில்.
அவர்கள் பண்பாடு அப்படி. " வெளிநாட்டிலிருந்த நாங்கள் வருகிறோம் கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே நிறுத்திவிட
வேண்டு"மென்று எச்சிலுக்கு எச்சரிக்கையா விடமுடியும்? இப்படித்தான் இந்த்தியா இருக்கும். இதையெல்லாம் சகிச்சிக்கிறதுன்னா இந்தியாவுக்கு வா, இல்லாங்காட்டி உன்ன யாரும் வெத்தல பாக்கு வச்சி கூப்பிட்டாத அலட்டிக்காத என்றல்லவா ஒரு பண்பாடு நம்மை வரவேற்கிறது.
ரயிலில் ஏறியவுடன், ரயில் பணியாள் ஒருவனை அழைத்துவந்து இவர்களெல்லாம் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். நன்றாக
கவனித்துக் கொள்ள வேண்டுமென்று வேண்டுகோல் விடுத்தார் சரத். அவன் மண்டையை மண்டையை ஆட்டினான். ஆனால் எல்லாரையும் எப்படி உபசரித்தார்களோ அப்படியே எங்களையும் உபசரித்தான்.
ஆனால் இம்முறை உணவு பரி மாறலில் நேர இடைவெளி இருந்தது. ஏனிந்த
மாற்றம் என்று பார்த்தால், அதிகாரிகள் நடமாடிக்கொண்டு கண்காணித்த வண்ணம் இருந்தனர். கண்காணிப்பு எந்நேரமும் இருந்தால் எல்லாம் ஒழுங்கு தப்பாது நடந்தேறும். குடும்பத்தை நிர்வகிப்பதிலிருந்து அரசு நிர்வாகம் வரை கண்காணிப்பில் ஒரு ஒழுங்கும் நேர்மையும் இருந்தால் எல்லாம் சரியாகவே நடக்கும். நம் பிள்ளைகளைக் கூட நாம் கண்காணித்த படியே இருந்தால் அதற்குள்ளேயே கறார் வந்துவிடும்.தனியாக உருட்டல் மிரட்டலெல்லாம் செய்ய வேண்டியதில்லை. அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் நம் கண்கள் பார்த்துக்கொண்டிருக்கிறது என்றாலே போது. தவறுகள் நடப்பதை தடுத்துவிட முடியும்.
ஆறரை மணி நேரத்தில் ரயில் டில்லியை அடைந்தது. இம்முறை கொஞ்சம் விரைவாகவே டில்லியை அடைந்துவிட்டது. ரயில் இறங்கியவுடன் சரத் எங்களைக் கவனிக்கச் சொல்லி கோரிக்கை விடுத்தாரே அந்தப் பணியாள் வந்து எங்கள் கூட்டத்தோடு நின்றிருந்தார். சரத் அவனைப் பார்த்தவுடன் தன் பணப்பபையை எடுத்து பணம் கொடுத்தார். ஆளைத் தேடி வந்து பணம்(டிப்ஸ்) வாங்கிக்கொண்டவன் கூச்சமே பட்வில்லை. ஒரு தலை சொறிதல் கூட இல்லை. அவன் வந்து நின்றவுடன் சரத்தும் புரிந்துகொண்டு காசை எடுத்து நீட்டினார். அவன மலர்ந்த முகத்தோடு வாங்கிக்கொண்டு மீண்டும் ரயிலுக்குள் ஏறிக் கொண்டான். இத்தனைக்கும் எங்களுக்கென்று சிறப்பாக எதையும் செய்துவிடவில்லை. இதுவும் அங்கே பண்பாடுதான். லஞ்சம் வாங்காதிருப்பது வேறு நாடுகளில் பண்பாடு என்றால், லஞ்சம் வாங்குவது இந்தியாவில் பண்பாடுதான். என்ன நகை முரண் பாருங்கள்? 'இந்தியன்' தாத்தா போல ஒரு லட்சம் தாத்தா இந்தியாவில் உள்ளபடியே இருந்தாலும், இந்தியா அப்படியேதான் இருக்கும்.
ஆனால் அசுத்ததையும். லஞ்சத்தையும், ஒழுங்கின்மையையும் தாண்டி இந்தியாவைத் தூக்கி நிறுத்துவது அதன் வரலாறும், வரலாற்று தொன்மம் சார்ந்த சான்றுகளும்தான்.
மறூநாள் காலை தாஜ்மஹால் , கிருஷ்ணன் அவதரித்த இடமான மதுரா, செங்கோட்டை, ராஜஸ்தான் பார்த்துவிட்டு மீண்டும் டில்லிக்குத் திரும்பி மேலுமொரு இரவு ரயில்பயணத்தில் காசிக்கும்(வாரனாசி) ஹரிதுவாருக்கும் ரிசிகேசுக்கும் பயணம் செய்யவேண்டும்.
தொடர்ந்து பயணத்தில் இருங்கள்.......

Comments