Skip to main content

நேற்றைய தொடர்ச்சி, கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்

( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.)

கோ.புண்ணியவான்





காதலைப்பற்றி இன்னொரு கவிஞனின் பதிவு இது.



யதார்த்த நிழலில்

கடந்து செல்லும்

காற்றினுள்கூட

பயணிக்கும்

உன்னோடு பேசும்

என் வார்த்தைகள்

...........

என்னோடு

நீ நடந்த தெருக்களில்

நிறம் அறியா அறியாத

சுவடுகளாய்

பதிந்து கிடக்கிறது

உயிர்ச்சிதறல்



உன்னில்

ஊடுறுத்துச்செல்லும்

நினைவுகளினூடே

உயிரும் வருகிறது

பத்திரப்படுத்த

வரவேண்டும் நீ (ப.ராமு- நயனம்)



இந்தக் கவிதையின் வழியாக கசியும் பொருளைப்பாருங்கள்.சொல்ல வந்தது அப்படியே சொல்லிலும் விழுந்திருக்கிறது. உயிரின் நிறம் என்ன? அறிய முடியாத நிறம்.அந்த நிறம் அவளோடு நடந்த தெருக்களில் இன்னும் சிதறியே கிடக்கிறதாம். தன் நினைவாலேயே உயிரும் உடன் வருகிறது.அது காணாமற்போகாமல் இருக்க, நீதான் பக்கதுணையாய் வரவேண்டும் என்கிறான் கவிஞன்.

இந்தக்கவிதை முழுக்க முழுக்க உணர்வுத்தளத்தில் இயங்குகிறது.இது உயிர்ப்புடன் இயங்குவதற்கு அவர் கையாண்ட அற்புதமான படிமம் ஒரு காரணம் .கவிதையில் காணும் சொற்கள் முழுக்க முழுக்க படிமத்திலேயே ஜீவிக்கிறது.

பல சமயங்களில் காதல் தோல்விகள் நல்ல கவிதைகளைப் பிரசவித்து விடுகின்றன. மாறாக வெற்றி பெற்ற காதல் கவிதைகளைத் தருவதில்லை.இது நடைமுறை நிதர்சனம்.எனவே காதல் தோல்விகளையே நான் ஆதரிக்கிறேன்.



காதலை உணரும் முதல் ஊடகம் கண்தான். அவளையோ அவனையோ பார்த்தபிறகு ஏதோ மின்சாரம் பாய்ந்ததுபோன்ற பிரமிப்பு ஏற்படும். அந்தப்பிரமிப்பு காதலில் முடிகிறதோ இல்லயோ ஒருதலைக்காதலாக வளர்ந்துகொண்டே இருக்கும்.சில சந்தர்ப்பங்களில் பழகும் சந்தர்ப்பமும் வாய்க்கும்.அப்படி வாய்க்காத தருணங்களில் எனக்கு அவளைப் ஒருமுறை பார்த்தாலே போதும், நான் இப்பிறவியின் பயனை அடைந்துவிடுவேன், என்கிறான் ஒரு கவிஞன் தன் கவிதைமொழியில் இப்படி,

மேற்கொண்டு விவரிக்க எதுவுமில்லை



நாம் சந்தித்துக்கொண்டது எல்லாம்

விடிவதற்கு முன்பாகத்தான்

அவசர அவசரமாய் வருவாய்

அவசர அவசரமாய் பழகுவாய்

அவசர அவசரமாய் செல்வாய்

விடிவதற்குள் கருகி உதிர்ந்துவிடும்

எனது அனிச்ச மலர்கள்

சூரிய வெளிச்சத்தில்

எஞ்சியது

நிலவில் காயாத ஈரமும்

துயிலாத கனவுகளும்தான்.



மேற்கொண்டு வாழ எதுவுமில்லை. (பா.அ.சிவம் - நயனம்)



நான் சற்று முன் சொன்னது சரிதான் என்பதை இக்கவிதை கட்டியங்கூறுகிறது.காதல் காதலில் தொடங்கி காதலில்தான் முடியவேண்டும். இப்படியே பார்த்து பழகியவாறு இருந்தாலே உவப்பானது என்கிறான். இறுதியில் கவிஞன் கூறும்- மேற்கொண்டு வாழ எதுவுமில்லை என்ற வரிதான் காதல் சுகானுபவத்தின் உச்சம்!







மார்க்சியம்- அடக்குவோரும் என்னாளும் அடங்குவோரும்



இந்த உலகம் எப்போதும் அடக்குவோரையும் அடங்குவோரையும் படைத்துக்கொண்டே இருக்கிறது.எடுத்துக்காட்டுக்கு எங்கும் அலையவேண்டாம்.தமிழ் சமூகமே நல்ல சான்று.சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தே அடிமைத்தளத்தில் அகப்பட்டு மீளமுடியாமல் தவிக்கும் சமூகம். அடிநாட்களில் அரசர்களிடமும்.பின்னர் நில பிரபுக்களிடமும் தொடர்ந்து கலனித்துவ வாதிகளிடமும், முதலாளிகளிடமும்,இன்றைக்கு இனவாதிகளிடமும் சிக்கிப்போராடிக்கொண்டிருக்கிறது. இதனை சில கவிஞர்கள் உற்று நோக்குகிறார்கள்.

வீணர்கள் ஆனதற்கு யார் காரணம்

கல்வியின்றி வேலையின்றி

விழிபிதுங்கும் பிள்ளைகளை

பதில் சொல்லுங்கள்

வாழைக்கன்றுகளாய்

வெட்டிப்போட்டால்

விளச்சல் எங்கிருந்து வரும்?

வறுமையில் வாடித்தவிக்கும் எங்களை

வாழத்தகாதவனென்று

சுட்டுப்போட்டால்

உங்கள் சூரத்தனத்தை

சுடுகாடும் கேள்வி கேட்கும். (வெ.தேவராஜுலு பினாங்கு-மக்கள் ஓசை)



மனித உரிமை போராளி சேகுவாரா பற்றிய நினைவுகளைக் இக்காலச் சூழலோடு ஒத்திசைத்துப்பார்க்கிறார் ஒரு கவிஞர்.

அந்த நூற்றாண்டின்

புரட்சியின் நிழல்கள்

இந்த நூற்றாண்டிலும்

விழுகிறது

நிழலின் நிஜம்

மரபாணுவால்

சாத்தியமாகும்

எனும் நம்பிக்கை

எம்மில் துளிர்கறது (செ.குணாளன் பட்டர்வர்த்-தென்றல்)



மார்க்சியக் கொள்கையின் பிரதிபலிப்பாகக் கவிதை கனன்று வருகிறது. மரபணுவால் சாத்தியமாகும்

என்ற சொற்கள் கவிதையைத் தூக்கி நிறுத்துகிறது. மரபணு என்ற வார்த்தயை போராட்டத்தின் குறியீடாக்காட்டுகிறார்.மேற்கண்ட இரு கவிதைகளும் கச்சா பொருளாகக் கையாளப்பட்டாலும், சொல்லாட்சியால் அதன் வீர்யம் மட்டுப்படவில்லை.

இதோ பல நூற்றாண்டுகளாய்

உலகின் பல பாகங்களில்

நாங்கள் தலையாட்டியே வாழ்ந்தவர்கள்

எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்

மன்றாடிய தமிழன்

விரித்துப்போட்டான்

வரலாற்று ஏட்டை

மொழி,பண்பாடு,அரசியல்,சமயம்,அமூக மதிப்புகள்

என இவனது தலையாட்டும் பட்டியல்

நீண்டு பரந்து கிடந்தது...... (ஆ.குணநாதன் - மௌனம்)

அடிமைத்தளத்தில் வாழ்ந்து பழகிவிட்டவனை யார் தட்டி எழுப்புவது.இன்னொரு சேகுவாரா, கவிஞன் அவதாரம் எடுக்கிறான். கவிஞனின் குரல் அங்கதத்தோடு உரத்து ஒலிக்கிறது கவிதையில்.

கடனுக்கும் லெவிக்கும் கட்டவே

சதா எரியும் அடுப்பு நெருப்பருகில்

உடல் நோக வெந்தும்

உயிர் நோக நொந்தும்

உழைத்ததெல்லாம் போகுமென்பது

எனக்கென்ன தெரியும்



காய்ச்சலில் கிடந்த ஊர்க்காரரின்

காதில் சொல்லிச்சென்றது

டிங்கிக்கொசு

தன் சொந்த ஊரில் பிழைக்க வழியில்லாமல் வேறு தேசத்துக்கு வந்து முதலாளித்துவத்தின் பிடிக்குள் சிக்கித்தவிப்பது மட்டுமின்றி, உயிர்க்கொல்லும் ஏடிஸ் கொசுவால் கடிக்கப்பட்டுவிடுகிறான்.கடித்த கொசு அவனின் நிலை உணர்ந்து பேசுவதாக அமைகிறது கவிதை.கொசுக்குத்தெரியாது தான் செய்த பாவம். காய்ச்சலில் படுத்துக்கிடப்பவனுக்கு அக்காள் தங்கை இருப்பதும், மனைவியில் தாலியை அடமானம்வைத்து கப்பலேறியதும்,குழந்தை இருப்பதும் !ஆனால் ஏஜண்டுக்கும், முதலாளிக்கும் கண்டிப்பாய்த்தெரியும்.அதைப்பற்றி அவர்களுக்கென்ன கவலை.அவன் வங்கி பாக்கியைப்பற்றியும்,எந்த ஊருக்கு மனைவி குழந்தைகளை உல்லாசப்பயணத்துக்கு அழைத்துப்போகலாம் என்பது பற்றியும், அடுத்து எங்கே நிலம் வாங்கிப்போடலாம் என்பதுபற்றிய கவலைகள் இருக்கும்போது, தனக்கு உழைத்த மனிதர்களைப்பற்றி ஏன் கவலைப்படவேண்டும்?



தொடரும்......

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...