Skip to main content

புத்தக வெளியீடுகளில் தொடர்ந்து அரசியல் ஆதிக்கம் பெருகி வழியும்

ஊத்தான் மெலிந்தாங் என்கிற ஊரில் கடந்த சுதந்திர தினத்தன்று ஒரு அறிமுகப்படைப்பாளரின் கவிதை நூல் வெளியீடு நடந்தது. 4 மணி நேரம் தூரப்பயணத்தில் அங்குச் சென்றிருந்தோம். பயணம் இவ்வளவு நேரம் பிடிக்கும் என்று சத்தியமாகத்த்தெரியாது. நான்தான் ஆய்வைச் செய்தேன். அவர் சுங்கைபட்டாணியில் உள்ள கல்லூரியில் பயிலும்போது என்னுடன் ஏற்பட்ட நட்பின் காரணத்தால் என்னையே புத்த ஆய்விற்காக அழைத்திருந்தார். தெலொக் இந்தானில் அவர் நிகழ்வு ஏற்பாடு செய்திருந்த நிலப்பகுதி நாங்கள் பயணம் செய்யச் செய்ய எங்களைவிட்டு தூரபோய்க்கொண்டே இருப்பதுபோன்று களைப்பை உண்டாக்கியது. ஊரை கண்டுபிடித்து போய்ச்சேரும்போது முக்கால் மணி நேரம் தாமதம். கூட்ட்ம் பண்டபத்தை நிறைத்திருந்தது.



ஏற்கனவே அவரின் நூலிலுள்ள கவிதைகளை வாசித்திருந்தேன். முற்றிலும் திரைப்பாடல் ஆசிரியர்களின் பாதிப்பும், உணர்ச்சி பொங்களின் வரிகளும் தூக்களாகவே தெரிந்தது. வைரமுத்து அவ்ரது ஆத்மார்த்த கவிஞராக் கவிதைகள் முன்மொழிந்தன. “ தைரியமா முதுகு சொரிந்துவிடாமல் அவருடைய கவிதைகளில் உள்ள பலவீனத்தை எடுத்துச் சொல்லனவேண்டும், கவிதை தனக்கான அடுத்த களத்தைக் கண்டடைந்துவிட்டதற்கான தெளிவையும் உணர்த்தவேண்டும், இது அவருக்குப் பயன்படும் என்று என்னோடு வந்த பாலமுருகன் சொல்லியிருந்தார். நானும் நியாயமான அப்படியே ஆய்வைத் தயார் செய்திருந்தேன்.



நூலாசிரியர் கவிதை நூலை தான் படித்த கல்லூரிக்காக அர்ப்பணித்திருந்தது அவரின் குருகுல நன்றியறிதலைப் புலப்படவைத்தது.. கூட்டத்திற்குச் சென்றதும் எங்களை வரவேற்றவர் பிறகு அரசியல்வாதிகளின் கூட்டமும் தலைவரும் வந்திருப்பதால், மிகவும் பரபரப்பாக அவர்களைக் கவனிப்பதில் மும்முரமாக இருந்துவிட்டார் விழா நாயகர். அரசியல்வாதிகளை உட்கார வைக்கும்போதும், அவர்களைத் தீவிரமாகக் கவனிக்கும்போதும், விழா நாயகரின் பணிவைக் கண்டு மிரண்டுவிட்டேன். அதுவும் தலைவர் அழைத்து பேசும்போது வலைந்து நின்று வாய் பொத்தி, குருவிடம் வேதம் பெறும் சீடனின் பணிவுக்கு நிகரான உடல்மொழியில் அவர் இருக்கும் தருணத்தைப் பார்க்கும்போது, இதுதான் “முதுகு வலைதல்” என்று நேரடியாகவே பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் முதுகெலும்பைப் பறிக்கொடுப்பது பற்றி விவாதங்களில்தான் பேசக் கேட்டிருக்கிறேன். நேரடி தரிசனத்தில் அதன் இழிவையும் அது கொடுக்கும் அடையாளத்தையும் உணரும்போது, சுதாரித்துக் கொண்டேன்.

அவரிடம் ஏற்கனவே அரசியல் வாதிகள் கலந்துகொள்ளும் நிகழ்வில் படைப்பாளர்கள் காணாமல் போவிடக்கூடும், குறிப்பாக நீங்கள் காணடிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தது நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. நான் சொல்லும்போது முழு பிரக்ஞையோடு கேட்டுக்கொண்டவராக உணர்த்தினார்.

பிறகு விழா நாயகர் தன்னுடைய உரையில், அந்த அரசியல் தலைவரை உயர்த்தி பேசி, தனக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது உரையின் இறுதியில் தலைவருக்காக ஒரு கவிதையும் எழுதி நடக்கவிருக்கும் நடந்த கொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு முதுகு கொடுத்துள்ளார் என்பதைப் பார்க்கும்போது அரசியல்த்தனங்கள் நிரம்பிவிட்ட புத்தக வெளியீடுகளுக்கு இனி குவியப்போவது பணம் மட்டுமே, இலக்கியமல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.



அடுத்ததாக நூலாய்வு மிகவும் முதிர்ந்த நிலையில் வெறும் புகழ்ச்சியாக இல்லாமல் கவிதையின் பலவீனங்களையும் அது அடைய வேண்டிய வளர்ச்சியையும் தைரியமாக பேசும்படியாக இருந்தது. இந்தக் கவிதைகளின் மொத்த வடிவத்தில் பல தமிழகத்து கவிஞர்களின் முகங்கள்தான் தெரிகின்றன, நூலாசிரியரின் முகம் தெரியவில்லை. ஆதலால் கவிதைகளில் சுயமான வெளிப்பாடுகள் குன்றியிருப்பதாகவும் மேலும் வாசிப்புத்தான் படைப்பில் வளர்ச்சியைக் கொண்டு வரும் என்று 25 நிமிடங்கள் நான் ஆற்றிய நூலாய்வு உரையைப் பாதி நேரம்கூட நூலாசிரியர் கேட்டிருக்க மாட்டார். அவர் பிசியாக இருந்தார், அங்கேயும் இங்கேயும் நகர்ந்தபடியும் பேசியபடியும். அரசியல் விருந்தினர் சரியாக கவனிக்கப்படவேண்டும் என்பதில் மட்டுமே குறியாக் இருப்பதுபோலப்பட்டது. ( நான் அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இன்னொரு பேச்சாளர் குறைபட்டுக்கொண்டார்.) எனக்கு இத்தனை நிமிடம்தான் ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும் என்று வரையறுத்திருந்தால் இந்த தேவையற்ற இலக்கிய நேரம் என்னால் களவாடப்பட்டிருக்காது.

கடைசிவரை அங்கே படைப்பாளனுக்கு/இலக்கியவாதிக்கு எந்த கவனிப்பும் வழங்கப்படவில்லை. அவ்வளவு தூரம் மெனக்கெட்டு சிரமம்பாராமல் வந்து நூலாய்வு செய்த எனக்கு “சரி சார் போய்ட்டு வாங்க” என்கிற சொற்பமான விடைக்கொடுத்தலுடன் முடிந்துவிட்டது. இலக்கிய பார்வைக்கும் நியாயமான விமர்சனங்களுக்கும் இனி புத்தக வெளியீடுகளில் இடமில்லை. அரசியல் சாயங்களுடன், அரசியல்வாதிகளுடன் அரசியல் மேடைகளை உற்பத்தி செய்யும் கூடமாக நூல்வெளியீடுகள் அமைந்துவிடுவது பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது.

வீடுக்குத்திரும்ப்ப பயண்ம் மேற்கொள்ளும்போது நிகழ்வுக்கு வந்த அதே நான்கைந்து மணி நேரத்திக்கடந்து செல்ல வேண்டுமே என்ற எரிச்சல் மேலோங்கி இருந்தது. கார் பயணம் செல்லச் செல்ல இருள் கூடிக்கொண்டே போனது.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...