Tuesday, May 11, 2010

களவாடப்பட்டுவிட்டன கவிதைகளும்

இலக்கை நோக்கிய

நெடுஞ்சாலை பயணத்தில்

கைக்குழந்தையுடன் காத்திருந்து

பின்னுக்கு ஓடி மறைந்தும்

கவிதையாய் மீள்பிரசன்னமாகிறாள்



பேருந்துக்காக காத்திருக்கும் தருணத்திலும்

இரு கால்களையும்

விபத்தாலோ வியாதியாலோ

இழந்த முகத்தோடு

அன்னாந்து கையேந்தும்

அவன் இடுப்புக்குக்கீழ்

கால்களாய் கவிதைகள் முளைத்தன



வியிற்றை நிரப்பிக்கொண்ட

புத்தி சுவாதீனமற்ற

இளம் தாயொருத்தி

சிக்குப்பிடித்த தலையோடும்

புராதன உடையோடும்

தன்னிலை மறந்து திரிகிறாள்

வாகனங்கள் சரசரக்கும்

மேய்ன் சாலையில்

அப்போதும் ஒர் கவிதை

குழந்தையை மையமிட்டிருந்தது



பள்ளிச்சீருடையோடு

பையன் ஒருவன் தள்ளிக்கொண்டுவந்த

மாணவி ஒலித்து வைத்திருந்த

புத்தகப்பையைத்தேடி

அலைந்தது

இன்னுமொரு கவிதை







பேரங்காடிப்பையோடு

வாசலைதொட்ட வேளையில்

ஓடிவந்த குழந்தை முகம்பார்த்ததும்

மையமிட்டிருந்த கவிதைகள்

சப்தமின்றி கசிந்து போய்விட்டன

பேரங்காடிகள் களவாடிவிட்ட

நோட்டுக்களைப்போல.



கோ.புண்ணியவான்.

Ko.punniavan@gmail.com

1 comment:

மாலதி தர்மலிங்கம் said...

"பேரங்காடிகள் களவாடிவிட்ட

நோட்டுக்களைப்போல"

இந்த வரிகளின் விளக்கம் தந்தால் சிறப்பாக இருக்கும்....