காலணிகள்

காலணிகள்


கடைவீதிகளில்
கணக்கில்லா காலணிகள்
எதை வாங்குவது?

மாளிகை வாசலில்
பள பளக்கும் வண்ணங்களில்
பல நூறு செருப்புகள்
அவள் காதணிக்கு
எது எடுபடும்?
உயரத்துக்கு
எது சரிபடும்?
தேர்வு செய்யவே
ஒரு அழகுக்கலை நிபுணர்
நடிகை ஏவலுக்கு.

திருமதி மார்க்கோஸ்
இரண்டாயிரம் வகை
காலணிகள்
பாரிஸ் ஷூ கோனரிலும்
பல நூதன
நகரங்களின்
பந்தா கடைகளிலும்
பார்த்து வாங்கியதாம்

கல்யாண விருந்தின்
காலணிக்கு
அறை மாதமாய்
அலைந்தும்
அகப்படவில்லை
ஒன்றும்


செருப்பில்லா
கால்களுக்கு
சிறப்பேதும் உண்டா

பாதங்களை
இழந்தவனுக்கு
பாதுகை பெரிதில்லைதான்
பாதமே பெரிது
இவருக்கு
நாய் குதறிய
காலணிகளும் மிஞ்சவில்லை
ஜோடி பிரிந்ததும்
வாய்ப்பில்லை

ஆயிரமாயிரம் காலணிகள்
அலங்கரிக்க கால்கள் இருக்க
பாதுகை பாராத
பால்லாயிரம் கால்களின்
பிரதிநிதிக்கும்
ஒரு ஜோடிக் கால்கள் இவை

இருள் கவிந்த உலகத்தை
இதயம் இருக்கா
என்று வினவும் கால்கள் இவை
மனிதம் மரத்துப்போனதால்
மறக்கப்பட்ட
கால்கள் இவை
சிம்மாசனம் ஏறிய
பாதுகைகளில்
மிதிபட்டு
சின்ன ஆசனம்
கிடைக்காத கால்கள் இவை
Comments

KAVIN said…
தங்கள் கவிதை அருமை......கால்கள் இல்லாதவன் இதைக் கவனிக்கப்போவதில்லை....காலணி இல்லாதவன் இதை மதிப்பதில்லை.