Skip to main content

9.பனிப்பொழிவில் 10 நாட்கள்


செங்க்கோட்டை வாசல்


                                    மேலே  தாஜ் மஹால் வாசல் / செங்கோட்டை

    அக்ராவில் அன்று இரவு தங்கிவிட்டு காலையில் காதல் சின்னத்தைப் பார்க்கத்திட்டம்.
    அக்ரா ஒரு புராதன ஊர். பழமை மேய்ந்து கிடக்கிறது. தூசு மண்டிக்கிடக்கிறது. மக்கள் பிழைப்பதற்காத நடத்தும் போராட்டம் முதல் பார்வையிலேயே தெரிகிறது. சாலைகளில் நேரடி விற்பனையாளர்கள், வேற்று நாட்டவரை அடையாளங்கண்டு கைவினைப்பொருட்களை தலையில் கட்டப் போராடுகிறார்கள். அறுபது விகிதம் மக்கள் சுற்றுப்பயணிகளை நம்பியே வாழ்கிறார்கள். செங்கோட்டையும் தாஜ் மஹாலும்தான் ‘வாழ்வாதாரம்’.
     அக்ரா தொடக்கத்தில் இந்து ராஜ்யமாகத்தான் இருந்திருக்கிறது. அது இந்து ராஜ்யத்தின் கீழ் இயங்கும் போது ஆக்ரபன் என்ற பெயரைப் பெற்றிருந்தது. மகாபார தத்தில் அக்ரபான் என்றே குறிப்பிடப்பட்டிருப்பது அக்ராதான் என்று நிறுவுகிறார்கள்.
    அக்ராவை ஏழ்மை சூழ்ந்திருப்பதன் காரணம் என்ன? அக்ரா மட்டுமல்ல. ஜெய்ப்பூரிலும் வறுமை தாணடவ மாடுகிறது. ஏன்?
    முகலாய மன்னர்கள் தன் சாம்ராஜ்யத்தை நிறுவ மக்களைப் பெரிதும் பயன் படுத்தி இருக்கின்றனர். தாஜ் மஹாலைக் கட்ட அறுபதாயிரம் பேர் வேலை வாங்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு காதல் சின்னத்தைக் கட்டி தன் பெயர் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பேசப்பட ஏழை மக்கள் சுரண்டப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அன்றாட வாழ்வு அரச வம்சத்துக்கே அர்ப்பணம் ஆகியிருக்கிறது. அவர்களின் சுகபோக வாழ்வுக்கு இவர்கள் அடிமையாகி தியாகம் செய்திருக்கிறார்கள் . அறுபதாயிரம் பேர் தாஜ் மஹாலை நிறுவவதற்கு  மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றால் , மற்ற அரசு பணிகளுக்கும் அவர்களின் எண்ணற்ற மனைவி மார்களுக்கும் ஊழியம் செய்ய எத்தனை ஆட்கள் பயன்படுத்தப் பட்டிருப்பார்கள்.எவ்வளவு அடிமைகளாக கை கட்டி வாய்ப் பொத்தி வேலை செய்திருப்பார்கள்?
    தாஜ் மஹால் தொழில் நுட்பமும் இயந்திரங்களும் இல்லாத காலத்தில் கட்டப் பட்டது. எல்லா வகை வேலைகளையும் மனிதக் கைகளினாலேயே செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒட்டகங்கள் , குதிரைகள் , யானைகளை அடுத்து மனிதசக்தி பெரிதும் பயன் படுத்தப்பட்டிருக்கவேண்டும். தாஜ் மஹால் முழுக்க முழுக்க மார்பல் கற்களால் ஆனது என்று சொன்னேன். இந்த மார்பல் கற்கள் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டவை என்றும் கூறியிருந்தேன். இன்றைக்குக் காரில் பயணம் செய்தாலே அக்ராவிலிருந்து ஜெய்ப்பூரை அடைய ஐந்து மணி நேரம் ஆகிறது. 1630 களில் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். நூற்றுக்கணக்கான மைல்களைக் கடந்து  ஒட்டகங்கள் மார்பல் கற்களை சுமந்துவர பயன் படுத்தப்பட்டிருக்கின்றன. மலைப் பாறைகளிலிருந்து  மார்பல் கற்களை வெட்ட மனிதக்கூலி தன் கைகளைப் பயன் படுத்தியிருக்கும். ஜெய்ப்பூர் மழை காணாத ஊர். கல்மலைத் தொடர்கள் சூழ்ந்த ஊர். கொலுத்தும் வெயிலில் மார்பல் கற்களைக் கைகளால் வெட்டி எடுக்க வேண்டுமென்பது எத்தனைக் கொடுமை. குறித்த நேரத்தில் வேலை முடிக்கப்படவில்லையென்றால் சாட்டை அடையாளங்களோடு அவர்கள் வேலைகளைத் தொடர்ந்திருக்க வேண்டும்.
    தாஜ்மஹாலில் பதிக்கப்பட்டிருந்த மார்பல் கற்கள் மிக நேர்த்தியாக வெட்டப் பட்டவை. வெட்டப் பட்டு அதன் மேல் அழகிய ஓவியங்கள்  கைகளாலேயே கீறப்பட்டு சுவரில் பதிக்கப்பட்டவை. வெட்டப் பட்டவை கற்களா? கைகளின் விரல்களா என்பது கற்களின் வேலைப்பாடை பார்ப்பவரின் வினாக்குள்ளாக்கும் வேதனை. பதிக்கப்பட்ட ஒவ்வொரு கல்லிலும் செதுக்கப்பட்ட வேலைப்பாடுகள். தாஜ்மஹாலை விட்டு வெளியேறுபோது வாசலில் , ஒருவர் மார்பல் கற்களில் ஓவியங்களை வெட்டிச் செதுக்கி சீர்படுத்துவதைக் காணும் போது அந்தக் காலத்துச் சிற்பிகள் பட்ட அவஸ்தைகள் கண்முன் விரிகிறது. கண் இமைக்காமல் கவனமாக செய்து கொண்டிருதார். நாங்கள் அவர் முன்னால் நிற்பதைக்கூட கவனிக்கவில்லை.
   தாஜ் மஹால் உருவான உண்மைக் கதை இது.
   தாஜ் மஹாலைப் பார்ப்பதற்கு முன்னரே முகலாய மன்னர்களின் அரண்மனையான செங்கோட்டையைப் பார்க்கப் புறப்பட்டோம். தாஜ் மஹால் காலை 11.00 மணிக்குத்தான் திறப்பார்கள். அதுவரைச் செங்கோட்டையைப் பார்த்து வரலாமென்று புறப்பட்டோம்.
      தாஜ் மஹாலுக்கு சற்றும் இளைத்ததல்ல செங்கோட்டை. மிகப்பெரிய ராஜ்ய அரச வம்சம் ராஜபோகம் அனுபவித்த அரண்மனை.
 பாபுர் , ஹிமாயுன் போன்ற முகலாயா வம்ச முன்னோடிகள் அக்ராவை ஆண்டாலும், அக்பர் ஆட்சியில்தான் அக்ரா செழிக்கத் துவங்யிருக்கிறது. செங்கோட்டை அக்பர் ஆட்சியில்தான் கட்டப்பட்டிருக்கிறது. அக்பர் அசைக்க முடியாத சரவர்த்தியாக வர்ணிக்கப்படுகிறார். அக்பரின் பேரன்தான் ஷாஜஹான். ஷாஜானின் தந்தை ஜஹாங்கிர். ஷாஜஹானின் மகன் ஓரங்கசிப். ஷாஜஹானைப் பின்னாளில் சிறை வைத்தவர் . செங்கோட்டையிலேயே வீட்டுச்சிறை வைத்தவர் சாத் சாத் அவருடைய மகன் ஓரங்கசிப். ஓரங்கசிப்போடு முகலாய சாம்ராஜ்யம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. தன் முன்னோர்களின் திறமை இவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. முகலாய சாம்ராஜ்யம் பங்காளிச் சண்டையால் மூன்றாக உடைந்து ஒற்றுமையின்மை நிலவியிருக்கிறது. அவருக்குப் பிறகு ஆட்சி ஆட்டங் காணத் துவங்கி இருக்கிறது. அந்த நேரத்திலதான் மேற்கத்திய சகுனி பிரிட்டிஷார் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். 1857ல் பிரிட்டிசார் பிரவேசத்துக்குப் பிறகு முகலாய ஆட்சி முற்றுப்பெற்றிருக்கிறது.

    சரி ஓரங்கசிப் தன் தந்தையை ஏன் சிறையிடவேண்டும்?

    தாஜ்மஹாலை நிறுவுவதற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்பதே  ஓரங்கசிப் தன் தந்தைமேல் வைத்த குற்றச்சாட்டு. தான் வாழும் வரை தாஜ்மாஹாலைப் பார்த்துக்கொண்டே இறக்க வேண்டுமென்பதற்காகவே, தாஜ் மஹாலைப் பார்க்கும்படியான அறையில் அவரை சிறை வைத்திருக்கிறார்கள். 1658 ல் அவர் சிறை வைக்கப்பட்டு  ஏழாண்டு கழித்து இயற்கை எய்தியிருகிறார். நாங்கள் அதே இடத்திலிருந்து தாஜ் மாஹாலைப் பார்த்தோம். பனிப்பொழிவிலும் அதன் தோற்றம் ரம்மியமாகக் காட்சி தந்தது.  அந்தரத்தில் மிதக்கும் தாமரைபோல மலர்ந்து மிதந்தது.
   செங்கோட்டை வெறும் அரண்மனை மட்டுமல்ல , அதற்குள்ளே சந்தை இருந்திருக்கிறது. அரசிகள் இளவரசிகள் அரச குடும்பத்தினர் வெளியே செல்லாமல் இருக்க உள்ளேயே அமைக்கப் பட்ட வியாபாரத்தளம்தான் இந்த சந்தை. இதற்கு மீனா பஜார் என்று பெயர். போர் வியூகம் அமைக்கும் முக்கிய ராணுவ மையம் இருந்திருக்கிறது. மனைவி மார்கள், அவர்களுடைய சேவகிகள் உட்கார்ந்து பேச நந்தவனம் அமைக்கப்பட்டிருக்கிறது . மிக முக்கியமாக எதிரிகள் ஊடுருவல் சாத்தியமாகாத வண்ணம் நுழைவாயில் மேடாக அமைக்கப்ப்ட்டிருக்கிறது. போருக்கு வரும் எதிரிகள் எளிதில் அரண்மனைக்குள் நுழையாமல் இருக்க இந்த போர்த் தந்திரம். இதைவிட இன்னொரு முக்கியமான தகவலும் கிடைத்தது. அக்ராவிலிருந்து தப்பித்துச்செல்ல டில்லிவரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்திதான். டில்லியிலும் அந்த கோட்டையைப்பார்த்தோம். அந்தச் சுரங்கம் எப்படி சாத்தியமானது என்ற சந்தேகம் இன்றைக்கும் மனதை பிராண்டிக்கொண்டே இருக்கிறது. இருக்கவே இருகிறார்கள் கூலித்தொழிலாளிகள். அவர்கள் அமைத்துவிட்டுப்போகட்டும் சுரங்கத்தை. சில உயிர் தப்பிக்க , பல உயிர் போனால் என்ன?

                                                                                                                                             தொடரும்...

Comments

. அக்ராவிலிருந்து தப்பித்துச்செல்ல டில்லிவரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்திதான். டில்லியிலும் அந்த கோட்டையைப்பார்த்தோம். //
We also see and wonder.
ko.punniavan said…
நாங்களும் அந்தக் கோட்டையைப் பார்த்தோம்.ஆனால் சுரங்கத்தைப் பார்க்கமுடியவில்லை. ஆனால் அக்ராவிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்களுக்கு சுரங்கப் பாதை அமைப்பது சாத்தியமா? பாதையல்ல சுரங்கப்பாதை! சாதாரண காரியாமா?

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...