Monday, March 4, 2013

வேட்பாளர்கள் வீ.ஆ.வேவும் சிக்ஸ் ஸ்டாரும்

        
                       (3.3.2013 ஞாயிறு குரலில் வெளியானது)

உள்ள படியே அவர் பெயர் அதுவல்ல. பிறப்புப் பத்திரத்தில் செங்கல்ராயன் என்ற கல்வெட்டு போல பத்திரமாகவே  பதிவாகியிருக்கிறது.
கடந்த தேர்தலில் வீசிய அரசியல் புயலில் ஆளுங்கட்சி, வயசான கிழவனின் பல் ஆட்டங்கண்டது போல தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி வைத்திய வாக்களிப்பில் கொஞ்சம்.. கொஞ்சமென்ன ? அடித்தலமே ஆடித்தான் போனது.    மனிதன் இறந்தும் சீக்கிரத்தில் அழியாத ஒரே உறுப்பு பல் தானாம். அதுவே ஆட்டங்காணும் போது அல்லக்கை அகந்தை  நிலைகுலையாதா என்ன?
 
 ஒரு அரை நூற்றாண்டாக ஆட்சி பீடத்தைச் சக்கரவர்த்தியின்  அகந்தையோடு பரிபாலனம் செய்ததற்கு  அது நல்ல பாடமென்றே பரவலாகப் பேசப்பட்டது. அந்தத் தேர்தல்தான் தமிழர்கள் நிறைய பேர் களமிறக்கி கரை சேர்ந்திருந்தது. அந்த அலையில்தான் செங்கல் ராயன் தன் பேரை மாற்றி வீர ஆவேச வேங்கை என்ற மறு அவதாரம் எடுத்திருந்தார்.  இந்த இட்டுக்கட்டிய பெயரைப் பிரபலமாக்க மனுஷன் செய்த கைங்காரியங்கள்தான் மூக்கின் மேலும் பின்னர் நாக்கின் மேலும் விரல் வைக்க வைத்தது.
 
இன்றைக்கு நீங்கள் பிரபலமாக வேண்டுமென்றால் வீ.ஆ.வே யின் வியூகத்தைப் பின்பற்றலாம்.
 
அவர் செய்தது என்ன?
 
முகநூலில் தன் சேவைகளைத் தினசரி பதிவு செய்துகொள்வது- போட்டோக்களோடு. பின்னூட்டங்களுக்கு இடுகை இடுவது. ஒரு டஜன் நோட்டுப்புத்தகம் கொடுத்தாலும் அது முகநூலில் சிரித்த முகங்காட்டும். ஒரு டஜன்! சும்மா இல்ல!
 
ட்விட்டரில் தன் கருத்தை எழுதிவைத்து பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்லி சபாஷ் பெறுவது.நாயக பிம்பத்தை நிலைநாட்டுவது. பின்னூட்டங்கள் எல்லாம் முன்னேற்பாடு என்று நான் சொன்னால் காழ்ப்பு என்று சொல்வீர்களோ என்றுதான் சொல்லாமல் இருக்கிறேன்.
 
வீர ஆவேச முகம் பதிவான நிழற்படத்தையே ஒவ்வொரு செய்திக்கும் கொடுப்பது.
 
கோயில் உடைப்பு, சமுதாயக் கோரிக்கை, இண்டர்லோக் நாவல் எதிர்ப்பணி, என்று பத்திரிகை நிருபரை உடன் அழைத்துப்போய் அப்போராட்டங்களைப் பதிவு செய்வது- பதிவு செய்தவரை பத்திரிகையில் போடச்சொல்லி சாயங்காலமாய் வீட்டுக்கு விருந்தினராய் அழைப்பது..... அல்லது சொந்தமாய் ஒரு கேமரா கையுமான செய்தியாளரை நியமித்து ஆடு களத்தில் நிகழ்த்துவது.
 
பெரிய படை திரட்டி மக்கள் எழுச்சி மாநாடு நடத்துவது..  கடைசியில் கடந்த தேர்தலில் ஆட்டங்கண்ட ஆளுங்கட்சி பிரதமரை அழைத்து.. “பார் என் பராக்கிரமத்தை” என்று பறைசாற்றி .. பிரதமரின் நன்மதிப்பை பெறுவது.....கட்சிக்குத் தான் விசுவாசமானவன் என்பதை அறிவிப்பாளரிடம் சொல்லி, பிரதமர் நெஞ்சைத் தொடுவது... எப்பாடு பட்டாவது இழந்த பலத்தை மீண்டும் பெறத்துடிக்கும், பிரதமருக்கு இதெல்லாம் ஆறுதலான ஆதரவான அலைகளை உண்டு பண்ணிய புளகாங்கிதத்தில் என்னவோ வீ.ஆ.வே யின் பிரபலத்துக்கு துணை நின்று வீ.ஆ வேவை ‘நீங்க எங்கியோ போய்ட்டீங்க’ என்ற விஸ்வரூபமாக்கியிருந்தது.
 
அதனால்தான் அடுத்த வேட்பாளராக வீ.ஆ.வேவின் பெயர் செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருந்தது. பிரதமரின் ஆள்னா சும்மாவா? ஆள்  மூன்றே வருடத்தில் 10 பிரபல ஆளுமைகளில்  ஒரு ஆளாகத் தேர்வு பெற்றிருந்தார் ஊடக நிருபர்கள் டாப் டென் கள ஆய்வில். மனுஷன் புல்லரித்து, புலகாங்கிதம் அடைந்து உன்மத்த நிலைக்குப் போயிருந்தார்.
ஆனாலும் மனுஷன் நிம்மதியாயில்லை!
அரசியலில் எந்தப் பயயா நிம்மதியா இருக்கமுடியும்? அதுவும் தேர்தல் நெருங்கிவிட்டால்?
 
அறிவியல் சிந்தனையில் ஒரு தியரி உண்டு. வினை எதிர் வினையாகி, பின்னர் எதிரெதிர் வினையாகி, அதுவே வில்லங்கமாகி ... வீ.ஆ.வேவை நிலைகொள்ளாமைக்கு ஆளாக்கியது.
 
 சிக்ஸ் ஸ்டார் சீனி இன்னொரு பலம்வாய்ந்த வேடபாளராகக் பெரும் புயலாகித் தூள் கிளப்பிக் மேலெழுந்து கொண்டிருந்ததுதான் வீ.ஆ.வே வுக்கு வயிற்றில் புளியை - ஊசிமிளகாயாய்க் கலக்கி அல்சரில் போய் முற்றுகையிட்டிருந்தது. சிக்ஸ் ஸ்டார் பெயர் எப்படி வந்தது என்று விசாரித்தபோது அது அவர் ஜெராந்துட்டில் இருந்த போது தன் மலிகைக் கடைக்கு வைத்த நாமகரணம் என்று விஷயம் வெளியானது. அந்த ஸ்டார் என்கிற வார்த்தைதான் இங்கே பஞ்ச்.
 
கூடுதல் பலத்துக்காக சமீபத்தில் சிக்ஸ் ஸ்டார்  கேரள மாநிலத்தில் பாலக்காட்டு மாவட்டத்தில் கிச்சாலாஞ் சேரியில் மலையாள மந்திரவாதி  நம்பிகளிடம் தன் அரசியல் ஒளிமயமான எதிர்காலத்துக்கான ஆசியைப் பெற்று வந்தது யாருக்கும் தெரியாது. அதன் பிறகு அவர் மேல் அவருக்கு இருந்த நம்பிக்கை வலுவாகித்தான் போனது.
அவர் கொடுத்த தாயத்தை அவர் கட்ட சொன்ன இடத்தில் கட்டி வைத்திருப்பதும் அதனை அடிக்கடி தொட்டுக் கண்ணில் வைத்துக்கொள்ள வேண்டுமென்ற மாந்திரீகரின் அறிவுரையாம் . அதனைச் சிரமேற்கொண்டிருந்தார்.
 
மாந்த்ரீகர் தாயத்தைக் கட்டச் சொன்ன இடம் தொப்புளுக்குக் கீழ் , குறிக்கு நேர் செங்குத்தாக மஞ்சளும் நீலமுமான வண்ண அரைஞான் கயிறில். அது வேறு அடிக்கடி திசையை மாற்றிக்கொள்வதும், அதனை அவர் சரியாக்கி திருப்பி வைப்பது சற்று சிரமமாக இருந்தாலும், அசூசையினூடேயும் அந்த அறிவுரையை அவர் சலைக்காது நிறைவேற்றி வந்தார்!
 
சமீபகாலமாக ஏன் வேட்பாளரின் கை சற்றைக்கொருதரம் அங்கே போகிறது என்று அவரின் ஆதரவாளர்கள் சிந்திக்கவேறு தொடங்கி இருந்தார்கள். அதைக் கேட்பதற்கு யாருக்கும் தைரியம் வரவில்லை! அச்சம் என்பது மடமையடா அல்ல சாபக்கேடு! சனியன்!
 
சமீபத்தில் இவர் செய்த அருங் காரியம் உலகப் பெரும் பொங்கல் எழுச்சி விழா நடத்தியதுதான். எழுச்சிக்கு என்ன வேலை பொங்கல் விழாவில் என்றும், மக்களுக்கு இதனால் என்ன பயன் என்றும் சிந்தனையாளர் சிலர் தலை சொறிந்து சொறிந்து பொடுகுதான் வெளியானது, பதிலில்லை!
பொங்கல் பெருவிழாவுக்கு நாட்டின் மூலை முடுக்கிலிருந்து மட்டுமல்ல  அண்டை நாடு தாய் லாந்திலிருந்தும், சிங்கையிலிருந்து மேடானிலிருந்தும் பர்மாவிலிருந்தும் தமிழர்கள் வந்து கூடியிருந்தார்கள். இது தென்கிழக்காசிய பிராந்திய பொங்கல் விழா என்றே பத்திரிகைகளிலும் பதாகைகளிலும் போட்டிருக்கலாம்!
 
பெருங் கூட்டத்தின் எண்ணிக்கை இரண்டு லட்சம் என்று எழுதியிருந்தது மாநுடம் பத்திரிகை.. ஒரு லட்சம் என்று போட்டிருந்தது சூரியக் கதிர் நாளேடு. ஆனால வீ. ஆ. வேவின் தரப்பு வேறு இருபாதாயிரம் பேர்தான் கூடினார்கள் என்று திட்டவட்டமாகக் கூறியது. ஒருகால்  உலங்கு வானூர்தியில் பறந்து தலைகளைக் கணக்குகெடுப்பு மீட்டரில் எண்ணியிருக்கலாம். சாத்தியம்தானே? என்ன எளவோ பத்திரிகை படத்தில் பார்க்கும்போது கூட்டம் நெரிசலாகத் தெரிந்தது. கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் சினீவாசா!
 
அந்தப் பெரும் நிகழ்வு அந்தத் தொகுதிக்கான வேட்பாளர் சிக்ஸ் ஸ்டார் சீனிதான் என்று கோடிகாட்டி இருந்தது. ஒரு எதிர் தரப்பு பத்திரிகை அவர்கள் உலகப் பெரும் பொங்கலுக்காக அவர் செய்த செலவில் இரண்டு பள்ளிக்கூடங்கள் கட்டியிருக்கலாம் என்று  விலாசி இருந்தது. பள்ளிக்கூடம் கட்ட ‘என்ன ஒங்கப்பனா லேசுல நெலம் கொடுப்பான்?’ என்று பதிலடி கொடுத்திருந்தார் சிக்ஸ் ஸ்டார் சீனி. ஆனால் ஒரு நிலம் வாங்கி ஒரு பள்ளியாவது கட்டியிருக்கலாமே என்று அடுத்த வினாவை யாரும் கேட்டுத் தொலையவில்லை!
 
வியூகங்களின் தொடர் நடவடிக்கையாக , வீ.ஆ.வே ஒரு பேட்டி பத்திரிகையில் வெளியாகியிருந்தது. பேட்டியில் மிக முகாந்திரமான தகவல் அவர் இந்த ஊரில்தான் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் என்பதுதான். எனவே இந்த மண்ணின் மைந்தனுக்கே சீட் தரப்படவேண்டும் என்ற கோஷம் அதன் வழியாக தெருக்களில் ஊடுருவியிருந்தது. அதற்கு ஆதாரமாக அவருடைய பிறப்புப் பத்திர படத்தை வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தது அந்தப் பத்திரிகை.
 
 சிக்ஸ் ஸ்டாரை நிலை கொள்ளாது தவிப்புக்கு ஆளாக்கியது இச்செய்தி . இது ரொம்ப வலுவான பாய்ண்ட். வாக்காளர்களின் நெஞ்சைத் தொடும் அம்சம். இக்கருத்தை எப்படியாவது அடித்து நொருக்கிப் பஸ்பமாக்கிட வேண்டும் என்று பெருத்த ஆலோசனையில் இருந்தனர் சிக்ஸ் ஸ்டார் தரப்பு. அத்தருணத்தில்தான் அவருடைய நெருங்கிய சகா ஒரு ஆலோசனையைச் சொன்னார்.
“தலைவரே ஒன்னும் பயப்படாதீங்க. ஒங்கம்மா இந்த ஊர்ல இருக்கும் போதுதான் நீங்கள் அவங்க வயித்தில கரு தெறிச்சீங்கன்னு ஒரு செய்தி கொடுப்போம்.. ஒரு பேட்டியே கொடுத்திடுவோம்.. தைரியமா இருங்க,” என்று தோள்களைத் தட்டினார். சிக்ஸ் ஸ்டாருக்கும் சிலிர்த்துச் சிரித்தார். பத்திரிகை பேட்டிக்கும் ஏற்பாடு நடந்தது. பேட்டியும் கொடுத்துவிட்டு வந்து விட்டார். இந்த ஊர்ல அவங்கம்மா கற்பமானாங்க சரி.. இந்த ஊருக்கு வந்து போக இருந்தப்பியா என்று வீ. ஆ,வே தரப்பு பேசிச் சிரித்தது ஸிக்ஸ் ஸ்டாரின் காதில் விழுந்திருந்தால் அவ்வளவுதான் !
 
சிக்ஸ் ஸ்டார் கேரளா சென்று வந்த தாக்கலை வீ.ஆ.வே காதில் கடித்துவிட்டார்கள் சில ஆதரவாளர்கள். மனுஷன் சும்மா இருப்பாரா? அவர் கிழக்கே போனால் இவர் தெற்கே யாத்திரை மேற்கொண்டார். ரகசியமாக அண்டை நாடான தாய்லாந்துக்கு ஒரு மின்னல் வருகை. தாய்லாந்தின் பட்டாயாவின் ஒரு புத்த விகாரத்தில் சகல சக்திவாய்ந்த ஒரு சியாம் சாமியின் காலடியில் போய் விழுந்தார். சியாம் சாமி ஐந்தாறு விளக்குமாற்று குச்சியைக் கையில் வைத்துக்கொண்டு மந்திர சொல்லி தலையிலிருந்து கால்வரை  ஒன்பது முறை அடித்து பீடையை அகற்றி விட்டுச் சொன்னார். இந்தப் பீடையை அகற்றாமல் இருந்திருந்தால் சீட் பறிபோயிருக்கும் என்று. சாஷ்டாங்கமாய் அவர் பாதங்களில் விழுந்தார் வீ.ஆ.வே. கைகூப்பி கும்பிடுவதையே பார்த்த சியாம் சாமிக்கு வீ. ஆ.வேவின் காலில் விழல் கொஞ்சம் மிரள வைத்து, மூன்றடி பின்னகர வைத்திருந்தது. ஆதிசிவனே பார்த்து இங்கு அனுப்பி பீடையை அகற்ற உதவியதாக உச்சி குளிர்ந்தார் வீ. ஆ.வே..  நல்ல மத நல்லிணக்கம் போங்கள்!
 
ஏன் தமிழக மடங்களுக்குப்போய் சாமியார்களைத் தரிசித்து ஆசி பெறவில்லையென்று தெரியவில்லை.  அவர்கள் அறியாததா? இந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக மட சாமியார்கள் (மடம்) தரிசனம் தியானமெல்லாம் திசை மாறி “மேனகை வந்தாச்சா?” என்று கேட்டுக் கொண்டு உறுதியான பிறகுதானே தியானம் கலைந்து கண்களையே திறக்கிறார்கள்!
 
இருவருக்குமிடையே இப்படிப் பல பனிப்போர் நடந்த வண்ணமிருந்தது, அதில் இன்னொன்று இவர் ஆயிரம் ஆதரவாளர்களுக்கு ஆட்டுக்குருமா விருந்து வைத்தால், அவர் எலும்பில்லாமல் ஆயிரத்து ஐநூறு பேருக்குப் போட்டார். தொகுதி முழுதும் பாதகைப்போர் வேறு ; வெற்றிக்கொடியாய் காற்றில் படபடத்தது. 
 
தேர்தல் எந்நேரத்திலும் வைக்கப்படலாம் என்ற தகவல் எல்லா தரப்பினருக்கும் காய்ச்சலைக் கொடுத்து வந்தது.
 
இந்த இரண்டு பலம் வாய்ந்த வேட்பாளருக்குப் போட்டியாக நேற்று பத்திரிகையில் வந்த செய்திதான் இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் வயிற்றைக் கலக்கியது. அதனை நினைக்கும் தோறும் கூட்ட நேரத்தில் வீ ஆ. வே கக்கூசைத் தேடி அலைந்த கஷ்டத்தை  லேசில் மறந்துவிடப் போவதில்லை.
 
ஒரு பத்திரைகையில் மேற்சொன்ன இரண்டு வேட்பாளருக்கு நடுவே எதிரடியாக சேரலாதன் படமும் போட்டிருந்ததுதான் காரணம்!
எளவு தேர்தல் நேரத்தில் எதிரிகள் காலான் மாதிரி எங்கிருந்து மொலக்கிறானுங்கன்னே சொல்ல முடியல! இன்னும் எத்தன பேரு இப்படி வேட்பாளர் பதாகையைத் தூக்கிக் கொண்டு தோன்றுவார்களோ?
 
வேறொன்றுமில்லை..தொகுதி வேட்பாளர் களேபரத்தில் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம் என்று சேரலாதன் இடைச்செருகல் செய்திருந்தார். ஒரு காப்பிக்கடையில் தனக்குத் தெரிந்த நிருபர் பையில் ஒரு வெளிர் நீள நோட்டைத் திணித்து காதோடு காதாக திருவிளையாடலை நிகழ்த்தச் சொல்லி இருந்தார். எளவு எந்த நேரத்துல விளையாடனும்னு வெவெஸ்தை இல்லை,., கெணரு வெட்ட பூதம் கெளம்புன கதையாயில்ல ஆய்ப்போச்சு!
 
தேர்தல் தேதி திட்டவட்டம்மாக எந்த வேட்பாளருக்கும் தெரியவில்லை. அவர்கள் உறுதிபட சொன்ன தேதி எல்லாம் காலாவதியாகி ..எதுக்கு தெரியாம சொல்லணும் என்று காப்பிக்கடையில், முடிதிருத்தும் கடையில் முச்சந்தியில் ஒரே பேச்சாக இருந்தது.  இதற்கிடையில் வேட்பாளர்கள் தொகுதியில் அலுவலகம் அமைத்து ‘மக்கள் சேவை’யில் ஈடுபட்ட வண்ணமிருந்தனர். வெள்ளப் பெருக்கு போர் போன்ற அவசர காலங்களில்தான் தற்காலிக அலுவலகங்கள் அமைப்பார்கள் இப்போது தேர்தல் காலமும் அவசர காலமாக்கப் பட்டுவிட்டது.
தேர்தல் நெருங்க நெருங்க இரண்டு தரப்பு முன்றாகி, மூன்று நான்காகி நான்கு ஐந்தாகி பல்கிபெருகி வந்தது வேட்பாளர் எண்ணிக்கை வதந்தி!
 
தேர்தல் நாள் அறிவிக்கப் பட்டது. இருவருமே வேட்பாளராகத் தேர்வு பெறவில்லை. கட்சியின் மூத்த தலைவர் கை சுத்தாமானவர் , மக்களுக்காக உழைப்பவர், சுய லாபம் கருதாதவர் என்ற பிரகடனத்தோடு களம் இறக்கப்பட்டிருந்தார்.
 
போங்கடா இருக்கவே இருக்கு எதிர்க் கட்சி!
 
தேர்தலுக்கு முன் வீ.ஆ.வினுடையதும், சிக்ஸ் ஸ்டாரினுடைய  பதாகைக் ‘குப்பைகளை’ அகற்றவது நகராண்மைக்கழகத்துக்கு பெரும்பாடாய்ப் போய்விட்டது.
   


3 comments:

Maran Nandan Sithambaram said.....


..
.
Conversation started September 18, 201211:40pm
Maran Nandan Sithambaram


தங்களின் ஆதங்கத்தை என்னால் உணர முடிகின்றது. வீழ்ந்து கிடக்கும் தமிழன் எழுவது எப்போது? . தங்களைப்ப் போன்றவர்கள் தினமும் இளைய தலைமுறையை சந்திக்கிறேர்கள்.உங்களை போன்றவர்கள் தான் ஏதாவது செய்ய முடியும்.

...
February 2512:37am
Maran Nandan Sithambaram


நாவல் போட்டியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் . தங்களின் சீனப் பயணக் கட்டுரைகளைப் படித்துக் கொண்டு இருக்கிறேன் . விரைவில் என் கருத்தை எழுதுகிறேன் . நலம் பேணவும் .அன்புடன் மாறன்

...
February 254:09am
Punniavan Govindasamy


நன்றிங்க மாறன்,

...4:18am
Punniavan Govindasamy


நாவல் போட்டி முடிவுகளில் மோசடி நிகழ்ந்தது . முதல் பரிசு பெற்ற பெண் எழுத்தாளருக்கு (கல்யாணி மணியம்) அந்தத் தகுதி இல்லையென்று நீதிபதிகளுக்கே தெரியும். ஆனால் கடைசி நேரத்தில்தான் அவர் பெயர் பரிசுப் பட்டியலில் இருந்தது தெரிந்ததால் ஒன்றும் செய்யமுடியாத நிலை என்று சொன்னார்கள். இதனை நான் முன்னெடுத்ததால் எனக்கு காழ்ப்பு என்ற சிறுமைப் படுத்துகிறார்கள். கணவர் எழுதி மனைவி பரிசு வாங்குவதும் தாத்தா எழுதி பேத்தி பரிசு வாங்குவதும் சகஜமாகிவிட்டது. என்ன செய்வது..என் நாவலை நூலாக்கி உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன் நீங்கள் தரமான வாசகர் என்று எனக்குத் தெரியும். படித்துப் பாருங்கள்.

...
Sunday10:28pm
Maran Nandan Sithambaram


ஐயா ,எப்படி இருக்கீறீர்கள் ? உங்களின் நாவல் பெறவும் படிக்கவும் ஆர்வமாய் எதிர்பார்த்து இருக்கிறேன் . தக்க விலை கொடுத்து பெறுவேன் .

...11:00pm
Punniavan Govindasamy


நல்லது மாறன், விரைவில் நாவல் வெளிவரும். உங்கள் அன்புக்கு நன்றி.

...11:08pm
Maran Nandan Sithambaram


நன்றி ஐயா

...11:08pm
Punniavan Govindasamy


நலமா?

...11:16pm
Maran Nandan Sithambaram


நலமே . நாவல் போல் உங்கள் blogல் உள்ள கட்டுரைகளும் நூல் உருவம் பெற வேண்டும். உங்களை போன்ற படித்தவர்கள் ,சான்றோர் சமுதாயத்தில் முன் உரிமை பெற வேண்டும் .எதிலும் அரசியல் , இலக்கியத்திலும் அரசியல் . உங்கள் தலைமுறை பழம் தின்று கொட்டை போட்டவர்கள் . உங்கள் ஆசிரியர் அனுபவம் ,எழுத்து அனுபவம் எல்லாம் நூல் உரு பெற வேண்டும் . பழைய தலைமுறைகளை மதியா இனம் வளராது

...11:18pm
Punniavan Govindasamy


நன்றி நீங்கள் சான்றோர்களோடு எடுத்தபடங்களே நீங்கள் அன்புள்ளவர் என்பதைக் காட்டுகிறது. நான் வெளியே உண்ணச் செல்கிறேன். சந்திப்போம்.

...11:19pm
Maran Nandan Sithambaram


சந்திப்போம் , வணக்கம்.

...
Today5:44pm
Maran Nandan Sithambaram


சார், உங்களுடைய "வேட்பாளர்கள் வீ.ஆ.வேவும் சிக்ஸ் ஸ்டாரும் " படித்தேன். மெய்சிலிர்த்து விட்டேன் . நகைச்சுவையாக நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரியின் பின்புலத்தில் சமுதாயத்தின் அவலம் வெளிபடுகிறது . அது bomoh ஆகட்டும் , தமிழ் நாடு சாமியார்கள் ஆகட்டும் . தகுதி இல்லாத தலைவன் ஆகட்டும் , சீட்டு கிடைக்காமல் எதிர்கட்சியில் தாவும் தவளை ஆகட்டும் . அபாரம் ! அபாரம் . உங்கள் messages உள்வாங்கி கொள்ளும் தரமான வாசகர்கள் நம்மிடையே எத்தனை பேர் ? . அகிலன் சொல்லுவார் ,ஒரு எழுத்தாளனின் எழுத்து மனதை சுற்றி வர வேண்டும், வயிற்றை சுற்றி அல்ல .நீங்கள் முதல் வகை எழுத்தாளர் . மனசாட்சியுள்ள எழுத்தாளர் .முதுகு எலும்பு உள்ள எழுத்தாளர் நீங்கள் .என் எண்ணத்தில் நீங்கள் உயர்ந்து விட்டிர்கள் ,சார் .
Maran Nandan Sithambaram said.....


..
.
Conversation started September 18, 201211:40pm
Maran Nandan Sithambaram


தங்களின் ஆதங்கத்தை என்னால் உணர முடிகின்றது. வீழ்ந்து கிடக்கும் தமிழன் எழுவது எப்போது? . தங்களைப்ப் போன்றவர்கள் தினமும் இளைய தலைமுறையை சந்திக்கிறேர்கள்.உங்களை போன்றவர்கள் தான் ஏதாவது செய்ய முடியும்.

...
February 2512:37am
Maran Nandan Sithambaram


நாவல் போட்டியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் . தங்களின் சீனப் பயணக் கட்டுரைகளைப் படித்துக் கொண்டு இருக்கிறேன் . விரைவில் என் கருத்தை எழுதுகிறேன் . நலம் பேணவும் .அன்புடன் மாறன்

...
February 254:09am
Punniavan Govindasamy


நன்றிங்க மாறன்,

...4:18am
Punniavan Govindasamy


நாவல் போட்டி முடிவுகளில் மோசடி நிகழ்ந்தது . முதல் பரிசு பெற்ற பெண் எழுத்தாளருக்கு (கல்யாணி மணியம்) அந்தத் தகுதி இல்லையென்று நீதிபதிகளுக்கே தெரியும். ஆனால் கடைசி நேரத்தில்தான் அவர் பெயர் பரிசுப் பட்டியலில் இருந்தது தெரிந்ததால் ஒன்றும் செய்யமுடியாத நிலை என்று சொன்னார்கள். இதனை நான் முன்னெடுத்ததால் எனக்கு காழ்ப்பு என்ற சிறுமைப் படுத்துகிறார்கள். கணவர் எழுதி மனைவி பரிசு வாங்குவதும் தாத்தா எழுதி பேத்தி பரிசு வாங்குவதும் சகஜமாகிவிட்டது. என்ன செய்வது..என் நாவலை நூலாக்கி உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன் நீங்கள் தரமான வாசகர் என்று எனக்குத் தெரியும். படித்துப் பாருங்கள்.

...
Sunday10:28pm
Maran Nandan Sithambaram


ஐயா ,எப்படி இருக்கீறீர்கள் ? உங்களின் நாவல் பெறவும் படிக்கவும் ஆர்வமாய் எதிர்பார்த்து இருக்கிறேன் . தக்க விலை கொடுத்து பெறுவேன் .

...11:00pm
Punniavan Govindasamy


நல்லது மாறன், விரைவில் நாவல் வெளிவரும். உங்கள் அன்புக்கு நன்றி.

...11:08pm
Maran Nandan Sithambaram


நன்றி ஐயா

...11:08pm
Punniavan Govindasamy


நலமா?

...11:16pm
Maran Nandan Sithambaram


நலமே . நாவல் போல் உங்கள் blogல் உள்ள கட்டுரைகளும் நூல் உருவம் பெற வேண்டும். உங்களை போன்ற படித்தவர்கள் ,சான்றோர் சமுதாயத்தில் முன் உரிமை பெற வேண்டும் .எதிலும் அரசியல் , இலக்கியத்திலும் அரசியல் . உங்கள் தலைமுறை பழம் தின்று கொட்டை போட்டவர்கள் . உங்கள் ஆசிரியர் அனுபவம் ,எழுத்து அனுபவம் எல்லாம் நூல் உரு பெற வேண்டும் . பழைய தலைமுறைகளை மதியா இனம் வளராது

...11:18pm
Punniavan Govindasamy


நன்றி நீங்கள் சான்றோர்களோடு எடுத்தபடங்களே நீங்கள் அன்புள்ளவர் என்பதைக் காட்டுகிறது. நான் வெளியே உண்ணச் செல்கிறேன். சந்திப்போம்.

...11:19pm
Maran Nandan Sithambaram


சந்திப்போம் , வணக்கம்.

...
Today5:44pm
Maran Nandan Sithambaram


சார், உங்களுடைய "வேட்பாளர்கள் வீ.ஆ.வேவும் சிக்ஸ் ஸ்டாரும் " படித்தேன். மெய்சிலிர்த்து விட்டேன் . நகைச்சுவையாக நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரியின் பின்புலத்தில் சமுதாயத்தின் அவலம் வெளிபடுகிறது . அது bomoh ஆகட்டும் , தமிழ் நாடு சாமியார்கள் ஆகட்டும் . தகுதி இல்லாத தலைவன் ஆகட்டும் , சீட்டு கிடைக்காமல் எதிர்கட்சியில் தாவும் தவளை ஆகட்டும் . அபாரம் ! அபாரம் . உங்கள் messages உள்வாங்கி கொள்ளும் தரமான வாசகர்கள் நம்மிடையே எத்தனை பேர் ? . அகிலன் சொல்லுவார் ,ஒரு எழுத்தாளனின் எழுத்து மனதை சுற்றி வர வேண்டும், வயிற்றை சுற்றி அல்ல .நீங்கள் முதல் வகை எழுத்தாளர் . மனசாட்சியுள்ள எழுத்தாளர் .முதுகு எலும்பு உள்ள எழுத்தாளர் நீங்கள் .என் எண்ணத்தில் நீங்கள் உயர்ந்து விட்டிர்கள் ,சார் .


ko.punniavan said...

நன்றி மாறன்,
கதையை நன்றாக உள்வாங்கி இருக்கிறீர்கள்.என் அங்கதப் போக்கை உள்ளபடியே ரசித்திருக்கிறீர்கள். ஒரு படைப்பாளனுக்கு இந்த கிரியா ஊக்கியைவிட வேறென்ன வேண்டும்.