Skip to main content

19. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?


கங்கை அழைப்பைக் தடுக்கும் வனிகச் சாமியார்கள்

அரிதுவார் மனதை ஒருநிலைப் படுத்தும் இயற்கை அழகு நிறைந்த இடம். காசிபோலல்லாமல் கொஞ்சம் சுத்தமாகத்தான் இருகிறது. கிளை நதிகள் சங்கமித்து சலசலத்தோடும் நதிநீர் நம்மை தண்மையாகவே வைத்திருக்கிறது. தண்ணீரின் இறைத் தன்மை அது. கங்கை மாதா தாய்மையின் தண்மை அது. நீர்  கடவுளாகவும், தாயாகவும், அன்பைச் சொரியும் கன்னியாகவும் பல அவதாரங்களில் நம்மை தடுத்தாட்கொள்கிறது. இறை நம்பிக்கை இல்லாதவரையும் இந்த நதியென்னும் இயற்கை அன்னை ஆரத் தழுவி தன் தண்மையை சொரிந்து விடுவதில் இயற்கைதான் இறைவன் என்ற வேதாந்த கற்பிதத்தை போதிக்கிறது.

மீண்டும் ரிசிகேசின் தபோவனம் விடுதிக்குத் திரும்புகிறோம். பரிமாறிய உணவு வகைகளையே திரும்பத் திரும்ப பரிமாறுகிறார்கள். பசியோடு போனால் ஏதோ சாப்பிடலாம். பசியற்றவர்கள் தட்டைத் தள்ளி வைத்து விடுகிறார்கள் . பயண ஏற்பாட்டுத் தலைவர் 'சாப்பாடு நல்லாதான் இல்ல' என்று நம்மோடு ஒத்திசைத்து ஆறுதல் படுத்தும் மனோவியல் தெரிந்து வைத்திருந்தார். ஆனால் சற்றே வராண்டா பக்கம் பார்த்தால் மலையைத் தழுவி மலர்ந்திருக்கும் பனிக்கூட்டமும்,பச்சைப் போர்வையில் முகிழ்ந்திருக்கும் காடும், குளிர் பிரதேசத்தை மட்டும்  புணர்ந்து மகிழும் பூவினமும் நம்மை ஆற்றுப்படுத்துகிறது.

என்னென்ன உல்லாச வசதிகள் செய்து தருகிறார்கள் என்பதை ஒரு விளம்பரப் பலகையில் பட்டியல் போட்டு பயணிகளை ஈர்க்கிறார்கள். பனி சறுக்கு விளையாட்டு, நீர் விரைந்தோடும் ஓடையில் லாவகமாமாக படகு செலுத்த, மலை ஏற, என வகை வகையான உபகரணங்களை பக்கத்திலேயே விற்கிறார்கள். உல்லாசத்துக்கென்றே வரும் வெள்ளையர்கள் இக்கடைகளில் குழுமி இருக்கிறார்கள். நான் ஒரு கடையில் எட்டிப் பார்த்தேன். யாரோ உள்ளூர் வடநாட்டான்தான் பாராக்கு பார்க்க வந்திருக்கிறான் என்று என்னை கண்ணாலேயே என்ன வேண்டும் என்று கேட்டு ஊதாசீனப் படுத்தினான். கொஞ்சம் உடல் வெளுத்திருந்தால்  " வாட் டு யு நீட் சர்" என்று என்னை பணிவோடு அணுகியிருக்கக் கூடும். நிறம் மனிதர்களை என்னவெல்லாம் செய்து தொலைக்கிறது!

காலை பசியாறலை முடித்துக்கொண்டு விடுதியிலிருந்து இறங்கி கடைத்தெருவுக்கும் போனோம். அந்நிய ஊரில் கடைத்தெருவில் நடந்தே செல்வது சுகமாகத்தான் இருக்கிறது. நமக்கு பராக்குப் பார்பபதில் உண்டாகும் குதூகலம்தான் எவ்வளவு!

விடுதி மலைப்பகுதியில் இருப்பதால் கனரக வாகனங்களை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. மற்றபடி குதிரைகள்தான் சுமைதாங்கிகள்!



கடைத்தெருவைத்தாண்டி கங்கை நம்மை மீண்டும் சந்திக்கிறாள். அக்கரையிலும் இக்கரையிலுமாய் ரிசிகேஸ் ஒரு ஊராகவே பிரிந்து நிற்கிறாள். நடந்து கடப்பதற்கென்றே கட்டப் பட்ட அழகிய பாலம். அதை லட்சுமணன் பாலம் என்று பெயரிட்டுருக்கிறார்கள். ராமர் பாலம் என்றும்  ஒன்று உண்டு.குரங்குகள் நம்மை வரவேற்கின்றன. அனுமார் என்றே அதனைக் கருதுகிறார்கள். கொடுப்பதை மகிழ்ச்சியாக வாங்கித் தின்கிறது. தொல்லை தருவதில்லை -உண்ணக் கொடுத்தால்.(நாம் மட்டும் சாப்பிட்டால் அதற்கு வயிறெரியாத என்ன?

பாலத்தைதாண்டி இருக்கும்  பரபரப்பாக இருக்கிறது. மக்கள் கூட்டம்கடைத்தெருகளில் நிரம்பி வழிகிறார்கள். நினைவு பொருட்கள் பலவகையில் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். குறிப்பாக பூசைப்பொருட்கள் சிறையதாய் கலை நேர்த்திமிக்க வடிவங்களில்
கிடைக்கின்றன. பேரம் பேசுவதில் வல்லுனர்கள் அவற்றை குறைந்த விலையில் வாங்கிக்கொள்கிறார்கள்.

அப்படியே  நடந்து வீடமைப்புப்பகுதிகள் கடைத்தெருவெனக் கடந்து ஒரு ஒற்றையடிபாதையில் நடந்து ஒரு மேடானப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறார் சரத். உடலே சுமையாகத் தூக்கி வந்தவர்கள் திணற .." இன்னும் எவ்ளோ தூரமிருக்கு " என்ற அவர்களின் மூச்சுவாங்கல் 'உல்லாச்சப்பயணத்தின்" அதிமுக்கிய பலனைக் கேள்விக்குட்படுத்துகிறது. அதிலும் கிட்டதட்ட நூறு படிகள் இறங்கி நடக்கும் போது இன்னும்  "ஏண்டா வந்தோம்" என்ற பரிதாபக் குரலியும் கேட்க முடிந்தது.

படிகள் இறங்கி ஏழெட்டு பேர் ஏறக்கூடிய வாகனத்தில் ஏறி கங்கை புரண்டோடும் கரையின்  வேதம் சொல்லித் தரும் ஆஸ்ரமத்தை அடைகிறோம்.

கங்கை நதிக் கரியைல் நடக்கப்போகும் யாகத்திலும் பூசையிலும் கலந்துகொள்ளத் தயாராகிறோம். கங்கையின் தெளிந்த நீர் நம்மை குளிரவைக்கிறது. களைப்பிலிருந்து சற்றே விடுதலை கொடுக்கிறது. ஆனால் வனிகச் சாமியார்களின் தொல்லையும் கூடவே  ஆரம்பிக்கிறது இங்கேயும்!

தொடர்வோம்....

Comments

சென்ற பதிவில் ஒரு நாட் வைத்திருந்தீர்கள். அதை இன்னும் அவிழ்க்கவில்லையே... நடக்க சோம்பல் கொள்வோர் நிச்சயமாக பயணத்தை அனுபவிப்போர் அல்ல. நானும் போனேன் பார்த்தேன் என புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ரகத்தினர்.

கொடுத்த காசுக்கு வேர்க்க கூடாதுனு சொல்பவர்கள்...

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...