முத்தம் 16. ஆழிப்பெருக்கு கொடை தந்துபோன அதிசயம்
வெனிஸ் நீரின் நகரம். நீரில் மிதக்கும் கடைகள் ,வீடுகள், உல்லாச விடுதிகள் மதுக்கடைகள் என நீரினுள்ளிருந்து மேலெழுந்து புதிய அதிசய நகரமாக காட்சி கொடுக்கிறது. இதே போன்ற ஒரு நகரத்தை பாரதவர்ஷத்தில், வெண்முரசு நாவலில் காட்டிச்செல்கிறார் ஜெயமோகன். ஆனால் மகாபாரதம் எழுதப்பட்ட காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். அல்லது அவரின் புனைவு வழி அந்த பாரதவர்ஷ நீர் நிலத்தைக் காட்டுகிறார் என்றும் வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் நான் வட நாட்டில் கங்கை நதியோடும் ரிசிகேஸையும்,ஹரிதுவாரையும் இரண்டு நாள் இருந்து பார்த்தேன். இன்றைக்கு அதன் நிலப்பகுதி பாரதவர்ஷத்தில் காட்டப்படுவதைவிட பெரிதாக மாறியிருக்கிறது. இன்றைய கங்கை நதியின் இரு கறைகளிலும் கட்டடங்கள், கடைகள், வீடுகள், கோயில்கள், சிவன், விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு நதிகரை நகரமாக காட்சியளிக்கிறது. ஆனாலும் வெனிஸ் போல பட்டினத்தின் குறுக்கும் நெடுக்கும் ஓடும் நூற்றுக்கணக்கான நதிகளைக் காணக்கிடைக்கவில்லை. ஒவ்வொரு நதிநீரில் ஊர்ந்து செல்லும் உல்லாசப் பயணப் படகுகள், அதனுள்ளே நிறுவப்பட்ட மது பார்கள், நூற்றுக்கணக்கில் பயணிகளை ஏற்றிச்செல்லும் பெரும்படகுகள், கொண்டோலா என்று அழைக்கப்படும் , அழகுடன் அலங்கரிக்கப்பட்ட காதலர் படகுகள் நீரில் ஊர்ந்து செல்வதைப் பார்க்கமுடிகிறது. இது மண்ணின் நகரமா அல்லது விண்ணுலக சொர்க்கமா என்று சொல்லத்தெரியவில்லை.
நீரில் ஒரு குப்பை மிதப்பதைக்கூடப் பார்க்கமுடியவில்லை. பல இடங்களில் நீலமாக தன் அடையாளத்தை மாறாமல் காட்டுகிறது வெனிஸ் நதிகள்.
உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் இங்கு வந்து ஓய்வெடுக்கிறார்கள். அதன் ரம்மிய காட்சியை கண்களால் தரிசித்தாலே போதும் போதும் என்றிருக்கிறது. திரும்பும் இடமெல்லாம் நீராடும் நதி. நதியோரம் விடுதிகள் கடைகள், வீடுகள். நதியோரத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள், வெனிஸை மேலும் அழகுறச்செய்கிறது. கண்களுக்கு பெருவிருந்தாகவே அமைந்துவிடுகிறது. நீரின் தன்மை இயல்பாகவே களைப்பைப் போக்கவல்லது. உடல் உளக் களைப்பை. இங்கே அது திகட்டத் திகட்டக் கிடைக்கிறது.
அப்படியே படகிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழையும்படியான வீடமைப்பு முறைகள். ஆனால் எல்லாக் கதவுகளும் சாத்தியே கிடந்தது. யாராவது படகிலிருந்து இறங்கி வீட்டினுள் போகும் காட்சியைப் பார்க்காலாம் என்று வெனிஸ் நீர் நகரும் முழுதும் நடந்தேபார்த்தோம். கால்கள் வலிக்க வலிக்க நட்ந்தோம். அப்படி ஒரு காட்சி காணக்கிடைக்கவில்லை. இங்கே வசிப்பவர்கள் விடுமுறையில் வெளி ஊர்களுக்குப் போய்விடுவார்களாம். சொர்க்கமாகவே இருந்தாலும் எத்தனை காலத்துக்குத்தான் அதனையே பார்த்துக்கொண்ட்ருப்பது?
விலையுயர்ந்த இத்தாலிய உடைகள், அணிமணிகள், நினைவுச்சின்னங்கள் இங்கே நிறைய விற்கப்படுகின்றன. அதுவெல்லாம் சாமன்யனுக்கானது அல்ல. பெரும் பெரும் கோடீஸ்வர்களுக்கானது. நாம் சன்னல் வழியே பார்த்துவிட்டுப் நகர்ந்துவிடுவதே உத்தமம் . விலையை விசாரிக்கக்கூட நமக்கு ஒரு தகுதி வேண்டுமென்ற கம்பீரக் காட்சியை வெளிக்காட்டும் விலைமதிப்புள்ள பொருட்கள் அவை. சரி விடு, அடுத்தமுறை வெனிஸ் வரும்போது பெரும் பணக்காரனாக வரவேண்டுமென்ற மனக்கிளர்ச்சியையாவது உண்டுபண்ணுகிறது இந்தக் காட்சிகள்.
சரி வந்ததே வந்தோம் கொண்டோலாவில் பயணம் செய்யலாம் என்று சொன்னாள் மகள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு படகின் வாடகை கிட்டதட்ட மலேசிய ரிங்கிட் 200 கேட்கிறார்கள். எல்லாமே படகுதான் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. இதில் கொண்டோலா என்ன சதா படகு என்ன? கொண்டோலாவில் போயேத்தீரவேண்டும் என்று என் மகள் பிடிவாதம் பிடித்தால். ஒரு மணி நேரப்பயணத்துக்கு ஒரு படகோட்டியும் வந்தான். ஆனால் அவன் கொண்டு சென்ற இடம் சற்று வீச்சம் எடுக்கத் தொடங்கியது. ஏன் வீச்சம் வருகிறது என்று கேட்டேன். அவன் நீரின் தூய்மையைப் பாதுகாக்கப்படவில்லை என்றான். வேறு இடத்துக்குக் கொண்டு போங்கள் என்றதும். மற்ற இடத்துக்குப் போக இந்தப் படகுக்கு அனுமதி இல்லை என்றான். அவன் சொல்வது பொய்யென்றே எண்ணத்தோன்றியது. ஏனெனில் வேறு நீர் நிலைகளிலும் கொண்டோலாக்கள் ஊர்ந்ததைப்பார்த்தேன். பின்னர் விசாரித்துப்பார்த்தால்.. அங்கே அவன் அதற்குக் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்றார்கள். இதிலும் ஒரு அரசியலா?
வீடுகளின் கடைகளின் கழிவுகளை அகற்ற நீருக்குள்ளேயே பெரும் பெரும் குழாய்கள் அமைத்திருப்பதாக்ச் சொன்னான். இந்த துர் நாற்றம் ஒரு வேளை பழுதாகைப்போன குழாயிலிருந்து வரும் கசிவாகக் கூட இருக்கலாம் என்றே நினைக்கிறேன்.
வெனிஸ் உருவான வரலாறைப் படிக்கும்போது அது இயற்கைச் சீற்றத்தால் உருவான பட்டணம் என்றே அறிந்துகொள்ளலாம்.அடிக்கடி உண்டான நீப்ப் பெருக்கால் நகரம் அழியத்தொடங்கியிருக்கிறது. இருக்கின்ற நிலப்பகுதிகளைக் காப்பாற்ற அவர்கள் மண்மேடுகளை உருவாக்கி நீர்ப்பெருக்கை தடுக்க முயன்றிருக்கிறார்கள். அந்த நிலப்பகுதிகள் இன்று கடைத்தெருக்களாகவும். பெருகிய நீர் ஓடும் தடங்கள் காலப்போக்கில் நதிகளாகவும் வடிவம் கொண்டிருக்கிறது. இயற்கைப்பேரிடர் நிலப்பகுதியை அழித்துவிடாமல் இருக்க மனிதனை போராடவைத்த அதே வேளையில் நகர்வீதிகளில் அழகிய நதிகளையும் ஊடுறுவ வைத்து மண்ணின் சொர்க்கத்தை நிறுவிவிட்டிருக்கிறது. இத்தாலி மிகப்பெரிய சுற்றுலாத் தளமாக அமைந்ததற்கு வெனிஸ் நீர் நகரம் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறது.
தொடரும்...
வெனிஸ் நீரின் நகரம். நீரில் மிதக்கும் கடைகள் ,வீடுகள், உல்லாச விடுதிகள் மதுக்கடைகள் என நீரினுள்ளிருந்து மேலெழுந்து புதிய அதிசய நகரமாக காட்சி கொடுக்கிறது. இதே போன்ற ஒரு நகரத்தை பாரதவர்ஷத்தில், வெண்முரசு நாவலில் காட்டிச்செல்கிறார் ஜெயமோகன். ஆனால் மகாபாரதம் எழுதப்பட்ட காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். அல்லது அவரின் புனைவு வழி அந்த பாரதவர்ஷ நீர் நிலத்தைக் காட்டுகிறார் என்றும் வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் நான் வட நாட்டில் கங்கை நதியோடும் ரிசிகேஸையும்,ஹரிதுவாரையும் இரண்டு நாள் இருந்து பார்த்தேன். இன்றைக்கு அதன் நிலப்பகுதி பாரதவர்ஷத்தில் காட்டப்படுவதைவிட பெரிதாக மாறியிருக்கிறது. இன்றைய கங்கை நதியின் இரு கறைகளிலும் கட்டடங்கள், கடைகள், வீடுகள், கோயில்கள், சிவன், விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு நதிகரை நகரமாக காட்சியளிக்கிறது. ஆனாலும் வெனிஸ் போல பட்டினத்தின் குறுக்கும் நெடுக்கும் ஓடும் நூற்றுக்கணக்கான நதிகளைக் காணக்கிடைக்கவில்லை. ஒவ்வொரு நதிநீரில் ஊர்ந்து செல்லும் உல்லாசப் பயணப் படகுகள், அதனுள்ளே நிறுவப்பட்ட மது பார்கள், நூற்றுக்கணக்கில் பயணிகளை ஏற்றிச்செல்லும் பெரும்படகுகள், கொண்டோலா என்று அழைக்கப்படும் , அழகுடன் அலங்கரிக்கப்பட்ட காதலர் படகுகள் நீரில் ஊர்ந்து செல்வதைப் பார்க்கமுடிகிறது. இது மண்ணின் நகரமா அல்லது விண்ணுலக சொர்க்கமா என்று சொல்லத்தெரியவில்லை.
நீரில் ஒரு குப்பை மிதப்பதைக்கூடப் பார்க்கமுடியவில்லை. பல இடங்களில் நீலமாக தன் அடையாளத்தை மாறாமல் காட்டுகிறது வெனிஸ் நதிகள்.
உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் இங்கு வந்து ஓய்வெடுக்கிறார்கள். அதன் ரம்மிய காட்சியை கண்களால் தரிசித்தாலே போதும் போதும் என்றிருக்கிறது. திரும்பும் இடமெல்லாம் நீராடும் நதி. நதியோரம் விடுதிகள் கடைகள், வீடுகள். நதியோரத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள், வெனிஸை மேலும் அழகுறச்செய்கிறது. கண்களுக்கு பெருவிருந்தாகவே அமைந்துவிடுகிறது. நீரின் தன்மை இயல்பாகவே களைப்பைப் போக்கவல்லது. உடல் உளக் களைப்பை. இங்கே அது திகட்டத் திகட்டக் கிடைக்கிறது.
அப்படியே படகிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழையும்படியான வீடமைப்பு முறைகள். ஆனால் எல்லாக் கதவுகளும் சாத்தியே கிடந்தது. யாராவது படகிலிருந்து இறங்கி வீட்டினுள் போகும் காட்சியைப் பார்க்காலாம் என்று வெனிஸ் நீர் நகரும் முழுதும் நடந்தேபார்த்தோம். கால்கள் வலிக்க வலிக்க நட்ந்தோம். அப்படி ஒரு காட்சி காணக்கிடைக்கவில்லை. இங்கே வசிப்பவர்கள் விடுமுறையில் வெளி ஊர்களுக்குப் போய்விடுவார்களாம். சொர்க்கமாகவே இருந்தாலும் எத்தனை காலத்துக்குத்தான் அதனையே பார்த்துக்கொண்ட்ருப்பது?
விலையுயர்ந்த இத்தாலிய உடைகள், அணிமணிகள், நினைவுச்சின்னங்கள் இங்கே நிறைய விற்கப்படுகின்றன. அதுவெல்லாம் சாமன்யனுக்கானது அல்ல. பெரும் பெரும் கோடீஸ்வர்களுக்கானது. நாம் சன்னல் வழியே பார்த்துவிட்டுப் நகர்ந்துவிடுவதே உத்தமம் . விலையை விசாரிக்கக்கூட நமக்கு ஒரு தகுதி வேண்டுமென்ற கம்பீரக் காட்சியை வெளிக்காட்டும் விலைமதிப்புள்ள பொருட்கள் அவை. சரி விடு, அடுத்தமுறை வெனிஸ் வரும்போது பெரும் பணக்காரனாக வரவேண்டுமென்ற மனக்கிளர்ச்சியையாவது உண்டுபண்ணுகிறது இந்தக் காட்சிகள்.
கொண்டோலாவில் உல்லாசப்பறவைகள் |

Comments