Skip to main content

Posts

Showing posts from 2015

விருதுகள் கண நேர மகிழ்ச்சியே ( தமிழ் மலர் ஞாயிறு மலரில் என் நேர்காணல்)

விருதுகள் கண நேர மகிழ்ச்சியே கோ . புண்ணியவான் தமிழ் படைப்பிலக்கியத்துறையில் தவிர்க்க முடியாத ஆளுமை கோ . புண்ணியவான் . நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருபவர் . மூன்று சிறுகதைத் தொகுப்புகள் . இரண்டு நாவல்கள் , ஒரு கட்டுரைத் தொகுப்பு , ஒரு கவிதை நூல் , கெடா மாநில எழுத்தாளர்களை ஒன்றிணைத்துக் கொண்டு வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என 7 நூல்களை இலக்கிய உலகுக்கு அளித்தவர் . இப்போது ஆகக் கடைசியாக சிறார் நாவலான ‘ வன தேவதை ’ யைக்   பதிப்பித்து எண்ணிக்கையை எட்டாக்கியிருக்கிறார் . தமிழ் படைப்புகளுக்கு மலேசிய வாசகர்களிடம் அபரிமித வரவேற்பு இல்லையென்றாலும் , எழுதுவதிலிருந்து அவர் ஒதுங்கிவிடவில்லை . எழுதுவதை ஒரு சமூகக் கடமையென   எண்ணுபவர்களில் கோ . புண்ணியவானும் ஒருவர் . அவரின் தொடர் இயக்கம் , எழுத்துக் கலையை அடுத்த தலைமுறைக்கும் கையளிப்பு செய்தாக வேண்டும்   என்ற நோக்கமுடையது . சமீப காலமாக எழுத்துலகில் அதிகம் விருதுகள் பெறுபராக ஊடகங்கள் அறிவிக்கின்றன . குறிப்பாக அவர் எழுதிய ‘ எதிர்வினைகள...